பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 ச. திருமந்திரம்

கடவுளாக நெடுங்காலமாக மக்கள் வழிபாட்டு வந்தனர்; கடவுளைப் பாதி ஆண்-பாதி பெண்ணாகக் கருதி வழிபட்டனர். அச் சக்தி, விஷ்ணுவிடத்தில் இலக்குமியாகவும், சிவனிடத்தில் பார்வதி அல்லது உமைவடிவத்திலும் (அமைதிநிலையில்), துர்க்கை (காளி, சாமுண்டி, பைரவி, விந்திய வாசினி) (கடுமையான நிலையில்) ஆகவும் பிரமணிடத்திற் சரசுவதியாகவும் இணைக்கப்பட்டது.

இச் சக்தி பிற்காலப் புராணகாலத்தில் தனித் தனிக் கடவுளுக்கு மனைவியாக முறைப்படுத்தப்பட்டது. பின்பு இச் சக்தியைத் துர்க்கையாகக் காண்கிறோம்; அவள் எருமைத்தலை அசுரனைக் கொன்றவளாகவும், விந்த மலையின் அதி தேவதையாகவும், இறைச்சியும் மதுவும் படையற் பொருளாகப் பெறும் தெய்வமாகவும் காண்கிறோம். இங்ங்னம் ஏறத்தாழக் கி.பி. 500-இல் அம்மன் வணக்கம் தனி வணக்கமாக ஏற்பாடாயிற்று. அம்மனை முழுமுதற் கடவுளாக வணங்கும் மக்களும் ஏற்பட்டனர். சக்தியையே முழுமுதற் கடவுளாக வணங்கும் இவர்கள், சாக்தர் எனப்பட்டனர்; இவர் சமயம் ‘சாக்தம்' எனப்பட்டது. இது சைவத்திலிருந்து தோன்றியதேயாகும். யோக வகைகள், மந்திர சாதனைகள் என்பன இத் துறையைச் சார்ந்தவை, மந்திரம், யந்திரம், முத்திரை, சக்கரம் என்பன இத்துறையில் சித்தியடையச் சொல்லப்பெறும் வழிகளாகும்."

3. வேதாந்தம் ஆறு. நியாயம், வைசேடிகம், சாங்கியம், யோகம், மீமாம்சை, வேதாந்தம்."

4. சித்தாந்தம் ஆறு: பாசுபதம், மாவிரதம், காபாலம், வாமம், பைரவம், சைவம். -

இந்த அறுவகைச் சித்தாந்த சைவ முறைகளும் சைவத்தின் பிரிவுகள் ஆகும். ஆதலின், இங்கு இவை பற்றி ஓரளவு அறிதல் நல்லது. இவற்றைத் திருமூலர் குறிப்பதால் அவர் காலத்தில் தமிழகத்தில் இப் பிரிவினர் இருந்தனர் என்பது தெளிவாகிறது.

(1) பாசுபதம்:- ஆன்மாக்களுக்கு ஆணவ மலம் இல்லை; மாயை, கன்மம் என்ற இரண்டால் பந்தமுற்று, இன்ப துன்பங்களை அனுபவிக்கும் இவற்றில் வெறுப்புற்றுச் சாத்திர முறையானே தீக்கை பெற்றவனிடம் ஈசனது ஞானம்போய்ப் பற்றும்.அப்பொழுது ஈசன்தன் குணங்களை அவன்பால் பற்றுவித்துத் தன் அதிகாரத்திலிருந்து ஓய்வு பெற்றிருப்பான் என்பது பாசுபதர் கொள்கை." இவர்கள் தங்கள் உடம்பில் சாம்பலையும் களிமண்ணையும் பூசுவர்; கருப்புடைகளை அணிவர் தலைமயிர் முடியிடாமலும் முடியிட்டும் கொள்வர். இவர்கள்