பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமய வளர்ச்சி శి) G5

இதிகாசகால முதலே நாட்டில் இருப்பவர்; பசுபதி வழிபாட்டினர்; லிங்க வழிபாட்டினர்; சிவனுடன் கணங்களையும், பேய்களையும் இணைத்து வழிபட்டனர்; சாதி வேறுபாடு அற்றவர்; ஜபம் தயம் இவற்றில் ஈடுபட்டவர். இவர்தம் முகத்திலும், தோளிலும், கொப்பூழிலும் மார்பிலும் லிங்க முத்திரை இடப்பெற்றிருக்கும். உயர்ந்த பாசுபத விரதம் ஞானம் எனப்படும். சிவன் யோக ஆசிரியனாக வந்து, அந்த ஞானத்தைக் குரு, ததீசி, அகத்தியர், உபமந்யு முனிவர்க்கு உபதேசித்தான். அந் நால்வரும் பலர்க்கும் அந்த ஞானத்தை உரைத்தனர். அச் சீடர்களிடமிருந்து குருமார் பலர் தோன்றினர். இச் சமயத்தில் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பன வற்புறுத்தப்படுகின்றன. பாசுபத யோகிக்குச் சிவன் காட்சியளிப்பான். அநுஷ்டானமே பாசுபத சமயத்தில உயிர் நாடியானது."

(2) மாவிரதம்:- (மஹாவ்ரதம்) - பாசுபதக் கொள்கையில் கூறப்பெற்ற ஆன்மாக்கள் பந்தமுற்றுச் சுகதுக்கங்களை அநுபவிக்கும். சாத்திரத்திற் கூறும் முறையே தீக்கை பெற்று, எலும்பு மாலை அணிதல் முதலிய சரியைகளில் வழுவாது ஒழுகினவர் முத்தராவர்; முத்தருக்குச் சிவனோடு சமமாக எல்லாக் குணங்களும் உற்பத்தியாம்' என்பது மாவிரதியர் கொள்கையாகும்.' நெற்றியில் மூன்று கீற்றுகளாக விபூதி அணிந்தனர்; உடல் முழுவதும் நீறு பூசினர்; தலைமயிர் உச்சியில் எலும்பு மணிகள் கட்டியிருந்தனர்; காதில் எலும்பு மணிகளைக் குண்டலங்களாக அணிந்தனர்; கழுத்தில் எலும்பு மணித்தாழ்வடம்- ஒரு முன்கையில் எலும்பு மணி கோத்த கயிறு கட்டியிருந்தனர்; தோளில் யோகப்பட்டிகையும் கறுப்பு மயிர்க் கற்றையாலான பூணுாலும் அணிந்தனர்; கோவணமும் அதன்மேல் அசைந்தாடும் சிறியவுடையும் அணிந்தனர்.'

மண்டையோட்டில் பிச்சையேற்று உண்பது, பினச் சாம்பலை உடம்பு முழுமையும் பூசிக்கொள்ளுதல் முதலியன மாவிரதிகள் கடுமையாகக் கையாண்டனர். இவர்களைப் பற்றி இராமநுசர் கூறியுள்ளார்.'

(3) காபாலம்:-"ஆன்மாக்களின் இயல்பும் பந்த இயல்பும் மாவிரதியர் கொண்டவாறேயாம். சாத்திர முறையே தீக்கை பெற்றுப் பச்சைக்கொடி ஒன்று கைக்கொண்டு, நாடோறும் மனிதர்தலை ஒட்டில் ஐயம் ஏற்று உண்பவர் முத்தராய், சிவன் ஆவேசித்தலால் எல்லாக் குணங்களும் பெற்றுச் சிவசமமாவர் என்பது காபாலிகர் கொள்கையாகும்." காபாலிகம் பாசுபதம் போலப் பழமையானது.

சைவ - 5