பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமய வளர்ச்சி མན་ཧྥུ་) 73

கணிகையர் : திருமூலர் காலத்தில் ஆடல் - பாடல்களில் வல்ல கணிகையர் இருந்தனர். அவர்கள் கோயில்களில் ஆடல் - பாடல் நிகழ்த்தினர்." -

சன்மார்க்க மடங்கள் : திருமூலர் காலத்தில் ஏழு மடங்கள் சன்மார்க்க சைவத்தைப் பின்பற்றி ஏற்பட்டனர். ஒவ்வொன்றிலும் ஒரு குரு இருந்தார். மூலர் (திருமூலர்), காலாங்கர், அகோரர், மாளிகைத் தேவர், நாதாந்தர், பரமானந்தர், போகதேவர் என்னும் எழுவர் மடத்துக் குழுவினர் ஆவர்." திருமூலர் மடத்து வழிவந்த சீடர்கள், மூலன் மரபினர் எனப்பட்டனர். அவர்கள் பல நூற்றாண்டுகள் தமிழ் நாட்டில் இருந்து வந்தனர். அவருள் ஒருவரே, கி.பி. 17-ஆம் நூற்றாண்டினரான தாயமானவர்க்குக் குருவாக இருந்தவர். இதனை,

மந்த்ரகுரு வேயோக... தந் த்ர குருவே மூலன் மரபில் வருமெளன குருவே!"

என்னும் அவர் பாடலைக் கொண்டு அறியலாம். திருச்சி மலைமீதுள்ள மெளனகுருமடம் இந்த மெளனகுருவுடன் தொடர்புடையதாகும்."

சைவப் பிரச்சாரம் : திருமூலர் தமது நூலில் சைவ சமயத்தின் சிறப்பை விளக்கியதுடன் நில்லாது, சமயப்பிரச்சாரம் செய்திருப்பதும் காணலாம். சிவனுக்கு நிகராகும் தெய்வம் வேறில்லை; அவன் பிறப்பு அற்றவன், பேரருளாளன்; யாவர்க்கும் இன்பம் அருள்வான்; அவனைத் தொழுங்கள்; ஞானம் பெறலாம்; அவனை எந்த வகையிலும் ஏத்தலாம்; அவன் அருள் புரிவான்." காரைக்கால் அம்மையாரும், பரண தேவரும் கையாண்ட முறைப்படியே திருமூலரும் தம் பெயரையும் நூல் படிப்பதால் அடையும் பயனையும் குறித்துள்ளார்." இக் குறிப்பும் பலரையும் பயன் கருதிப் படிக்கத் தூண்டவல்லது.

திருமந்திரச் சிறப்பு : ஆகமாந்தா அல்லது சைவசித்தாந்த சாத்திரங்கள் என்பன சுமார் கி.பி. 4 அல்லது 5-ஆம் நூற்றாண்டில் சிறப்புற்றன என்னலாம். குப்தர்கள் காலத்தில் கோதாவிரியாற்றங் கரையில் மந்த்ரகலேஸ்வர் என்ற இடத்தில், மந்த்ரகலேஸ்வர் கோயிலைச் சுற்றி நான்கு சைவ மடங்கள் இருந்தன. அங்கு ஆகமச் சைவர்கள் இருந்தார்கள்." இந்த 4,5,6-ஆம் நூற்றாண்டுகளில் திருமூலர் ஒரு நூற்றாண்டைச் சேர்ந்தவராதல் வேண்டும் என்பதும் முன்னரே கூறப்பட்டது. திருமூலருக்கு முன் தமிழ் நாட்டில் தமிழ் மொழியில் சைவ சித்தாந்த நூல் இல்லை, அவர் செய்த திருமந்திரமே சைவ சித்தாந்த முதல் நூல் என்பன தெளிவு. ஆதலின் இந் நூல் பின்வந்த அப்பர், சம்பந்தர், சுந்தரர் முதலிய சமயாசாரியர்கட்கும், அவர்களால் பரப்பப்பட்ட சைவ சமயத்திற்கும் ஆதார நூலாயிற்று.