பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமய வளர்ச்சி g7

மங்கையர்க்கரசியார் அவர் மனைவியார், (4)ஐயடிகளும் கழற்சிங்கரும் பல்லவர்கள், (5) கூற்றுவநாயனார் கொடும்பாளுர் அரச மரபினர்."

சிற்றரசரான நாயன்மார்: (1) திருக்கோவலூரை ஆண்ட மெய்ப்பொருள் நாயனார், (2) திருமுனைப்பாடி நாட்டை ஆண்ட நரசிங்க முனையரையர், (3) பெருமிழலை நாட்டை ஆண்ட பெருமிழலைக் குறும்பர், (4) கொடும்பாளுரை ஆண்ட இடங்கழியார்.

சேனைத்தலைவரான நாயன்மார்: (1) பல்லவர் சேனைத் தலைவரான சிறுத் தொண்டர், (2) சோழர் சேனைத் தலைவரான கலிக் காமர், (3) அவர் மாமனாரான மானக் கஞ்சாறர், (4) கோட்புலியார்.

பிராமண நாயன்மார்கள்: சண்டீசர், நமிநந்தி, திருமூலர், சம்பந்தர், குங்குலியக் கலயர், முருகர், உருத்திர பசுபதியார், அப்பூதியடிகள், நீலநக்கர், சோமாசி மாறர், சிறப்புலி, பூசலார், கணநாதர், தண்டி" - 14 பேர். -

வணிக நாயன்மார் இயற்பகை, அமர்நீதி, மூர்த்தி, காரைக்கால் அம்யைார், கலிக்கம்பர், கலியர்-6 பேர். -

வேளாள நாயன்மார்: இளையான் குடிமாறர், விறல் மிண்டர், மானக் கஞ்சாறர், கலிக்காமர், கோட்புலியார், அரிவாள் தாயர், அப்பர், மூர்க்கர், சத்தியார், வாயிலார், முனையடுவார், செருத்துணை, சாக்கியர்-13 பேர்.

சிவாசாரியர் நால்வர்: சுந்தரர், சடையனார், இசை ஞானியார், புகழ்த்துணையார். -

சாதிக் கொருவராயுள்ள நாயன்மார் திருநீலகண்டர்-குயவர்; கண்ணப்பர்-வேடர்; ஆனாயர்-இடையர், திருக்குறிப்புத் தொண்டர்-வண்ணார்; அதிபத்தர்-பரதவர்; நேசர்-சாலியர்; நீலகண்ட யாழ்ப்பாணர்-பாணர், நந்தனார் - பறையர், ஏனாதி நாதர்-சான்றார்; சிறுத்தொண்டர்-மாமாத்திரர்.

மரபு குறிக்கப்படாத நாயன்மார்: எறிபத்தர், குலச்சிறையார், கணம்புல்லார், காரியார்.

இந்த விவரங்களால், சைவ சமயம் பேரரசராலும் சிற்றரசராலும் எல்லாச் சாதி மக்களாலும் போற்றி வளர்க்கப்பட்டது என்பது அறியப்படும். இனி, இக்கால நாயன்மார் சைவ சமய வளர்ச்சிக்கெனச் செய்த திருப்பணிகள் யாவை எனக் காண்போம்: - சைவ - 7