பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i Ö8 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் ஆகவே, இறைவனது உண்மை நிலை அருவத்தையும் கடந்தது என்பதும் அந்த நிலை பாசஞானம் பசு ஞான்ம் இவற்றால் அறியப்படாது பதிஞானத்தால் மட்டிலுமே அறியப்படும் என்பதும் தெளிவாகின்றதன்றோ? பதியாவான் சிவனே யாதலின் பதிஞானம் என்பது சிவஞானம் என்பதை யும் அறிந்து தெளியலாம். - மேலும் இறைவன் பதிஞானத்தால்தான் அறியப் படுபவன் என்பதை இறைவனை அறிந்து அநுபவித்தோரின் திருவாக்குகளாலும் தெளியலாம். - தோடுடைய செவியன் விடையேறியோர் துவெண் மதிசூடி காடுடிைய சுடலைப் பொடியூசிஎன் உள்ளம் கவர்களவன்' என்று அருளுவர் ஞானசம்பந்தப் பெருமான். தேடிக் கண்டு கொண்டேன்-திரு மாலொடு நான்முகனும் தேடித் தேடொனா தேவனை-என்னுளே தேடிக் கண்டு கொண்டேன்' என்று கூறுவர் நாவுக்கரசர் தம் திருஅங்கமாலையில். இப்பெருமானே பிறிதோர் இடத்தில், என், புந்திவட் டத்திடைப் புக்குநின் றானையும் பொய்யென்பெனோ' என்று மொழிவதையும் காணலாம். 94. சம்பந். தேவா 1.1:1 95. அப், தேவா 4.9:12 95. மேலது 4.98:1