பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் - 2 (பசு), - 139 கும் இன்பதுன்பங்கள்- நுகர்ச்சிகள்- மற்றோர் உயிர்க்கு இல்லாமையால், ஒவ்வோர் உடம்பில் உள்ளதும் தனித்தனி வேறுவேறு உயிரே என்பது எளிதில் தெளிவாகும். அதுவன்றி, பல உடம்புகளில் உள்ள உயிர்களும் ஒன்றே என்று மெய்ப்பிப் பதற்கு வழி இல்லை. ஆதலின் உயிர்கள் ஒன்றல்ல, பலவே யாம் என்பது அறிந்து தெளியப்படும். - (இ) பதி-பசு அறிவு வேற்றுமை பதியும் அறிவுடை யது, பசுவும் அறிவுடையது என்றாலும் பதியின் அறிவு தானே விளங்குவது அறிவிப்பதற்குத் துணை ஒன்றையும் வேண்டா தது; தானே அறிவது. அங்ங்னம் அறியுங்கால் அறியப்பட்ட பொருளில் அழுந்தி அதன் தன்மையைப் பெறாது தன்னியல் பில் நின்றே அறிவது, அதனால் அது சுதந்திர அறிவு' என்று வழங்கப்பெறும். பசுவினது அறிவு அவ்வாறன்றிப் பிறிதொரு பொருள் அறிவிக்கவே அறியும் தன்மையுடையது. அங்ஙனம் அறியும் பொழுதும் அறியப்படும் பொருளில் அழுந்தி அதன் தன்மையதாகியே அறிவது. அதனால் அது பரதந்திர அறிவு' என வழங்கப்பெறும் அறியப்படும் பொருளில் அழுந்தி அதன் தன்மையதாதல் சார்ந்ததன் வண்ணமாதல் எனப்படும். பதியினது அறிவு பொருள்களை ஒவ்வொன்றாய் அறியாது எல்லாவற்றையும் ஒருங்கே அறிவது, மேலும் அவற்றை இடைவிடாமல் அறிந்தவாறே அறிந்து நிற்பதுஅதனால் அது பேரறிவு அல்லது முற்றறிவு என வழங்கப்பெறும். பசுவினது அறிவு அவ்வாறன்றி ஒரு காலத்து ஒரு பொருளையன்றிப் பிறிதொன்றனை அறிய மாட்டாது. ஒவ்வொன்றாகவே அறிவது, அதன்ையும் விட்டு விட்டு அறிவது அதனால் அது சிற்றறிவு என்று பேசப்பெறும். ப்தியினது அறிவு தான் அறிதலேயன்றிப்பிறிதோர் அறிவுக்கு அறிவாய் நின்று, அதனையும் அறியச் செய்யும் தன்மை யுடையது. அதனால் அது நுண்ணறிவு என்றும் சூக்கும