பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் - 2 (பசு) }49 மலம்மாயை கன்மம் மாயே யந்திரோ தாயி மன்னிச் சலமாரும் பிறப்பி றப்பில் தங்கிஇத் தரைகீழ் மேலும் நிலையாத கொள்ளி வட்டம் கறங்கென நிமிடத் தின்கண் நலமாரும் இறைவன் ஆணை யால் உயிர் நடக்கு மன்றே" என்ற அருணந்தி தேவரின் திருவாக்கிலும் இதனைக் காணலாம். இவண் கூறியவாறு பொதுமை நோக்கால் கூறினும், உண்மை நோக்கில் ஆன்மா வியாபகப்பொருள் என்பதே யாகும். அங்ங்ணமாயினும் உயிர் இறைவனது வியாபகத்துள் வியாப்பியமேயாகலின், அந்நிலையை அவனது திருவடிக் கீழ் நிற்றலாகவே அருளிச் செய்வதை அருளாசிரியன்மார் அனைவருமே மரபாகக் கொண்டுள்ளனர். அம்மான் அடிநிழற் தீழதன்றோ என்றன் ஆருயிரே" என்ற நாவுக்கரசரின் நல்வாக்கும், இருகாற் குரம்பை இதுநான் உடையது, இதுயிரிந்தால் தருவாய் எனக்குன் திருவடிக் கீழோர் தலைமறைவே’ என்ற அப்பர் பெருமானின் அருள்வாக்கும், தெளிந்தேன் சிவன்அடி சேர்ந்தேன் இனிமிகத் தெள்ளியனே.” 20. சித்தியார் - 2.88 21. அப். தேவா. 4.84:10 22. மேலது 4.113:2 23. பொன்வண்ணத்தந்தாதி - 23