பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#50 சைவசித்தாந்தம் ஒர் அறிமுகம் என்ற சேரமான் பெருமாள் நாயனாரின் பெருவாக்கும், மாவேறு சோதியும் வானவரும் தாமறியாச் சேவேறு சேவடிக்கே சென்றுதாய் கோத்தும்பி’ என்ற வாதவூரடிகளின் மணிவாக்கும், தேனார் கமலமே சென்றுதாய் கோத்தும்பி’ பொன்னங் கழலுக்கே சென்றுதாய் கோத்தும்பி’ தேனுந்து சேவடிக்கே சென்றுதாய் கோத்தும்பி’ செய்யார் மலரடிக்கே சென்றுதாய் கோத்தும்பி’ என்ற அப்பெருமானின் தொடர்வாக்குகளும் இம்மரபை உணர்த்துகின்றன. இப்பதிகத்தின் பழைய குறிப்பு சிவ னோடைக்கியம்’ என்று தெரிவிப்பதையும் ஒர்ந்து உணரலாம். இங்ங்னம் எல்லாம் வரும் மரபினை நோக்கும்போது 'திருவடிக்கீழ் இருத்தல் என்பதன் உண்மைப் பொருள் தெளிவாவதை உணரலாம். இக்கூறியவற்றால் ஆன்மா வியாபகமல்லது பிறிதாகாது என்பது உளங்கொள்ளப்படும். ஓர் உண்மை அறிவினது நிலை வேறுபாடே இச்சை யும் செயலும் என்பதை நன்கு அறிவோம். உயிர் அறிவுடைய தாதலின் இச்சையும் செயலும் அதனுடையவை என்பதும் பெறப்படும். ஆகவே, உயிர்களும் இறைவனைப் போலவே ஞானசக்தி, இச்சா சக்தி, கிரியா சக்தி என்னும் மூவகைச் சக்திகளையும் உடையனவாகின்றன. இதனால் இறைவனும் உயிரும் ஒன்றாகி விடுகின்றன என்று கருதலாகாது. இறைவன் இதிடுவா. திருக்கோத்தும்பி - 1 25. மேலது - 2 26. மேலது - 11 27. மேலது 15 28. மேலது - 17