பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் -2 (பசு) 155 றும் முற்றிலும் நீங்கி உயிர் தூய்மை பெறுவதால் இந்நிலை சுத்தாவத்தை என்ற பெயரைப் பெறுகின்றது. இந்நிலையில் உயிர் இறைவனது அருளையே பற்றுக்கோடாகக் கொண்டி ருப்பதால் இந்நிலையை அருள்நிலை என்று வழங்கலாம். இந்த மூன்று நிலைகளைப் பற்றியும், கேவலம் சகலம் சுத்தம் என்றுமூன் றவத்தை ஆன்மா மேவுவன் கேவ லந்தன் உண்மைமெய் பொறிக ளெல்லாம் காவலன் கொடுத்த போது சகலனாம் மலங்கள் எல்லாம் ஒவின போது சுத்தம் உடையன்.உற் பவந்து டைத்தே' என்று சிவஞான சித்தியார் விளக்குதலைக் கண்டு தெரியலாம். இக்கூறிய இம்மூன்று நிலைகளும் காரண அவஸ்தை' என்று வழங்கப்பெறும், இறைவன் உடம்பைக் கூட்டுவதற்கு முன் இருந்த கேவலநிலை அநாதிகேவலம்: அன்றாடம் வரும் கேவலம் நித்தியகேவலம் என்ற பெயர்களைப் பெறும். (6) மூவகை ஐந்தவத்தைகள் இனி, உயிர்கள் உடம்பை எடுத்து வாழும் நிலையில் சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம் என்ற ஐந்து நிலைவேறுபாடுகளை உடையனவாக இருக்கும். இந்நிலைகள் காரியவஸ்தைகள்' என வழங்கப்பெறும். இந்த ஐந்து நிலைகளும் அருந்தமிழில் நனவு, கனவு, உறக்கம், பேருறக்கம், உயிர்ப்படங்கல் என்று வழங்கப்பெறுகின்றன. 31. சித்தியார் - 1.37