பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் . 3 (பாசம்) }65 என்பது அழுக்கு. உயிர்களின் தூய்மையைக் கெடுத்து நிற்ற லால் இப்பெயர் பெற்றது. (2) ஆணவ மலம் ஆணவம் இல்லாத பொருளன்று உள்ள பொருளே. அறிவுடைய பொருளாகிய உயிரை அறியாமையுடையதாகச் செய்வதே இதன் இயல்பாகும். அறிவே உயிரின் இயற்கை என்றும், அறியாமை அதற்கு ஆணவமலத்தின் சேர்க்கையா லாகிய செயற்கையே என்பதும் சித்தாந்த உண்மை. இந்த ஆணவமலம் செம்பிற்களிம்பு போலவும் நெல்லிற்கு உமி போலவும் அனாதியே உயிர்கட்கு இயற்கைக் குற்றமாய் அமைந்துள்ளது. இதனைச் சிவஞான போதம், நெல்லிற் குமியும் நிறைசெம்பி னிற்களிம்பும் சொல்லிற் புதிதன்று தொன்மையே’ என்று குறிப்பிடும். செம்பிற்கு அதன்கண் உள்ள களிம்பு குற்றமேயாகும். அக்குற்றம் இடையிலே ஏற்பட்ட குற்றமன்று. செம்பு என்று உண்டோ, அன்றே அந்தக் களிம்பும் உண்டு. அந்தக் களிம்பு செம்போடு என்றும் இராது நீங்கிவிடும் என்பது, அதனைப் புளி முதலியன் இட்டுத் தேய்க்கும் பொழுது களிம்பு சிறிதளவு நீங்குதலும், துலக்கப்பட்ட செம்பில் பின்பும் களிம்பு மேலிடுதலும், புடமிட்டுப் பதம் அறிந்து இரச குளிகையையும் சேர்க்கும்பொழுது களிம்பு முற்றிலும் நீங்குதலும் உளவாதலை அறிகின்றோம். ஆகவே, களிம் பாகிய குற்றம் செம்பிற்குச் செயற்கையேயன்றி இயற்கை அன்று என்பது தேற்றமாகின்றது. 2. சி. ஞா.போ. சூத்திரம் 2. அதி. வெண்.8