பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தத்துவங்கள்-3 (பாசம்) () மும்மலங்கள் ‘பதி ஒன்றே என்பதையும் பசுக்கள் பல என்பதை யும் நாம் அறிந்தோம். பசுக்களைப் பிணித்துள்ளது பாசம் எனப்படும். பாசம் என்பதற்குக் கட்டுவது என்பது பொருளாகும். பாசங்கள் மூன்று. ஆணவம், கன்மம், மாயை என்பன. இவை முன்னரே சுட்டிக் காட்டப் பெற்றவையே. இவற்றுள் மாயை அனைவராலும் எளிதில் உணரப் பெறுவது. ஏனெனில் பல்வேறு பிறவிகளில் காணப்பெறும் உடம்புகளும், மற்றும் நிலம்நீர் முதலிய பெரும்பொருள்களும் இயங்கு திணை, நிலைத்திணை ஆகிய உலகத்தொகுதி முழுவதும் மாயையின் செயல்களேயாகும். கன்மமோ இவ்வளவு எளிதாகக் காட்சியில் உணரமுடியாதது. ஆனால் சிறிது நுனித்து நோக்கினால் உணரக்கூடியது. இதற்கு மேல் உள்ள ஆணவம் என்பதை உணர்தல் மிகவும் அரிது. இது சைவ சித்தாந்தத்தின் சிறப்பான பகுதியாகும். சில சமயங் கள் இதனை ஒப்புக்கொள்வதே இல்லை. பருப்பொருள் தூலப் போருள்) எளிதில் உணரவாராது. மாயை பொருள். ஆணவம் துண்பொருள்; கன்மம் இரண்டிற்கும் இடைப்பட்ட பொருள். இந்த மூன்றும் மும்மலங்கள் எனப் பெயர் பெறும் மலம்