பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் 3 (பாசம்) iss இதனை, நெல்லிற் குமியும் நிகழ்செம்பி னிற்களிம்பும் சொல்லின் புதிதன்று தொன்மையே -வல்லி மலகன்மம் அன்றுளவாம் " வல்லி-மாயை) என்று கூறுவர் மெய்கண்ட தேவர். உமாபதி சிவமோ, ~வினையோ அன்றிச் . சொல்லிவரும் மாயையோ அணுவை முந்தச் சூழ்ந்ததெனும் உரைமுதல்ஓர் தொடக்கி லர்பால் ஒல்லைவரும் எனின் உளதாம்; உயிர்உண் டாவே உளது மலம், மலம் உளதா ஒழிந்த எல்லாம். நெல்லின்முளை தவிடுமிபோல் அநாதி யாக நிறுத்திடுவர்; இதுசைவம் நிகழ்த்து மாறே" என்று மேலும் விளக்கமாக உரைப்பர். உமாபதியின் விளக்கம்: இதனைத் தெளிவுறுத்த முயலலாம். மும்மலங்களும் ஆன்மாவுடன் சேர்ந்திருப்பதை நெல்லிலே முளை, தவிடு, உமி சேர்ந்திருப்பதைக் காட்டி விளக்குவர் உமாபதி சிவம். முளையைப் போன்றது மாயை. உமியைப் போன்றது ஆணவம். எனவே அரிசி ஆன்மா விற்கு உவமையாகின்றது என்பது தெளிவு. இந்த மூன்று மலங்களும் எந்தவிதத்தில் உமி, முளை, தவிடு ஆகிய மூன்றுடன் ஒற்றுமைப் படுகின்றன என்பதுவே விளக்கத்தின் உயிர் நாடி. - - . . . நெல்லிலுள்ள முளைத்தல் ஆற்றல் முளையைத் தோற்றுவித்தல்போலக் கன்ம மலம் உயிரினிடத்துச் சுகதுக்கங் களை, முதற்காரணமாகநின்று, தோற்றுவிக்கும் தவிடு முளைத் 28. சி. ஞா. போ. சூத்திரம் 2. பா. 12 29. சிவப்பிரகாசம்-25 . . . .