பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் - 3 (பாசம்) 195 ಢಿಕTEುಖLu@ಹಿ.' 'நல்வினையாயினும் தீவினையாயினும் அறியாது செய்யின் வினையாகா? என்பர் புத்த சமயத்தினர். அவரைப் பின்பற்றியே பரிமேலழகர் தம் திருக்குறள் உரையில் சில இடங்களில் அவ்வாறு கூறினார். ஆயினும், மறந்தும் பிறன்கேடு சூழற்க; சூழின் அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு" என்பது முதலியவற்றால் ஆசிரியர் திருவள்ளுவனார்க்கு அபுத்தி பூர்வ வினை உடன்பாடாதல் இனிது விளங்கும். அமுதமாயினும் நஞ்சாயினும் அறிந்து உண்ணினும் அறியாது உண்ணினும் அவை தம் பயனைத் தந்தே தீரும். இப்பொருந்து மாறு பற்றியும் அபுத்தி பூர்வவினை உளதாதல் உணரப்படும். அமுதும் நஞ்சுமாகிய உவமை இவ்விடத்திற்குப் பொருந்தா எனக் கருதலாம். அவையும் வினையும் சடமேயாத லின் பொருந்தா தொழிதல் எங்ங்னம்? என்று ஒழியப்படும். அறியாது செய்த புண்ணியத்தாலும், பாவததாலும் பலர் நன்மையும் தீமையும் எய்தினமை கூறும் பல வரலாறுகள் உள்ளமையை நினைந்து தெளிவு பெறலாம். வினைகளால் நேரிடும் பயன்படும் பயன்கள் அறி யாது செய்யும் வினைகள் மென்மையும், அறிந்து செய்யும் வினைகள் வன்மையும் உடையன என்னும் அளவே செயற்படும் அறியாமல் செய்தவிடத்து வினை இல்லை என்பதில்லை. அமுதும் நஞ்சுமாக மேற்காட்டிய உவமானத் தின்படி அபுத்திபூர்வம் புத்திபூர்வம் இரண்டும் சமமாதலின், அவற்றுள் ஒன்றை வன்மையுடையதாகவும் மற்றொன்றை மென்மையுடையதாகவும் கூறியது என்னையெனின், அமுதும் நஞ்சும் தம் பயனைத் தாரா தொழியாமை மாத்திரைக்கே எடுத்துக்காட்டப்பெற்றன. ஏனெனில், அமுதினையோ, நஞ்சி 37. குறள் - 204 (தீவினையெச்சம்)