பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் முதலிய பூதச் செயல்களால் வருவன ஆதிபெளதிகம். பேய், பூதம், தீய தெய்வங்கள், இயமன் முதலிய தேவர்

  • 、* 45 X

பகுதியால் வருவன ஆதிதைவிகம். மேலும் சிலகருத்துகள் வினையைப்பற்றி மேலும் சில கருத்துகளை அறிந்து கொள்ளல் இன்றியமையாதது. சஞ்சிதமாய்க் கிடக்கும் வினைகள் பிராரத்தமாய் வரும் பொழுது முன்செய்த முறையில்தான் வரும் என்பதில்லை. முன் செய்தது பின்னும், பின்செய்தது முன்னுமாக வருதலும் உண்டு. அதற்குக் காரணம் அவற்றின் வன்மை மென்மைகளே யாகும். மிகப்பெரிய புண்ணியமும் மிகப்பெரிய பாவமும் செய்த பிறவியிலேயே பிராரத்தமாய் வந்து பயன் தரும். குற்றொ ருவரைக் கூறை கொண்டு கொலைகள் சூழ்ந்த களவெலாம் சொற்றொருவரைச் செய்த தீமைகள் இம்மை யேவரும் மெய்ம்மையே" என்ற சுந்தரர் திருமொழி இங்கு நினைக்கத்தக்கது. இக்கருத்தி னையே திருவள்ளுவரும், - பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா - பிற்பகல் தாமே வரும் " என்று குறிப்பிட்டுள்ளமையைக் காணலாம். பாவத்திற்கு இவ்வாறு கூறவே புண்ணியமும் அவ்வாறே செயற்படும் என்பதைக் கூறவேண்டுவதில்லை. மற்றும், வினைகள் தாம் செய்யப்பெற்ற முறையிலன்றி முன்பின்னாக பின்முன்னாக வருவது அவ்வவ்வினையின் தன்மைக்கேற்ப நிகழ்வதேயாகும். 45. சிவப்பிரகாசம்-29 46. சுந்தே, 7.3:9 47. குறள் 319 (இன்னா செய்யாமை)