பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தாந்த சாத்திரங்கள் 5 நல்லூரில் எழுந்தருளியிருந்த மெய்கண்ட தேவநாயனார் என்பவர். மெய்கண்டார் என்பது தீட்சையால் பெற்ற பெயர். இவரது பிள்ளைத்திருநாமம சுவேதவனப் பெருமாள்' என்பது. இவரது சந்தானமே திருக்கயிலாய பரம்பரை' என்று வழங்கப் பெறுகின்றது. இஃது இருகிளைகளாய் திரு வாவடுதுறையில் ஒன்றும், தருமபுரத்தில் ஒன்றுமாக இரண்டு ஞான பீடங்களைக் கொண்டு இலங்குகின்றது. இந்த நூல் சித்தாந்தத்தின் தலைமணி நூல் என்பதை உளங்கொள்ள வேண்டும். பன்னிரண்டே நூற்பாக்களில் (சூத்திரங்களில்) எல்லா மெய்நூல்களின் கருத்துகளையும் அடக்கி அளவை நெறி கொண்டு (தருக்க முறையைப் பின்பற்றி) மிகத்திட்பமும், நுட்பமும் அமையச் சித்தாந்தக் கருத்துகளைத்தெளிவாக முழுமையாக விளக்கும் முதல் நூல் இது. முதற்கண் தற்சிறப்புப் பாயிரமாக அமைந்த 'மங்கல வாழ்த்து, அவையடக்கம் ஆகிய இரு செய்யுட் களும் பல பொருள்களை தம்மிடத்தே கொண்டு செறிந்துள் ளன. இதன் நூற்பாக்களைப் பல கூறுகளாகப் (அதிகரணங் களாகப்) பிரித்து நூலாசிரியரே சுருக்கமான பொழிப்புரை (வார்த்திகம்) கூறியுள்ளார். இந்த உரை மேற்கோள் ஏது, எடுத்துக்காட்டு என்னும் உறுப்புகளைக் கொண்டது. எடுத்துக் காட்டுகள் வெண்பாக்களால் ஆகியவை. சூசிப்பது சூத்தி ரம்' என்பதற்கு இந்நூல் சிறந்ததோர் எடுத்துக்காட்டு இலக்கிய மாகும். இத்தகைய ஒப்புயர்வற்ற முதல் நூலைச் செய்தருளின வர் மெய்கண்டார்; இந்நூலாலும், பிறவற்றாலும் அருணந்தி தேவர் முதலிய மாணாக்கர்கட்குச் சித்தாந்தத்தினைத் தெளிவாக உணர்த்தியருளினார். இந்த மாணாக்கர்களும்