பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் இதனால் அவரால் தோற்றி ஒடுக்கப்பெறும் தத்துவங்கள் 'ஆன்ம தத்துவங்கள் எனப் பெற்றன என்பது அறியப்படும். ஆன்மதத்துவங்கள் இருபத்து நான்கு. அவை அந்தக் கரணம் நான்கு. ஞானேந்திரியங்கள் ஐந்து. கன்மேந்திரியங் கள் ஐந்து. தந்மாத்திரைகள் ஐந்து. பூதங்கள் ஐந்து. இவையனைத்திற்கும் மூல காரணமாகிய மூலப்பிரகிருதி "சாத்துவிகம், இராசதம், தாமதம் என்னும் முக்குணங்களை யும் உள்ளடக்கி அவற்றிற்கு வித்தாய் நிற்பது. எனவே முக்குணங்களும் வெளிப்படாது சூக்குமமாய் நிற்கும் நிலையே 'மூலப்பிரகிருதி எனப்படுகின்றது. முக்குணங்கள் வெளிப் படாது நிற்றல்பற்றி மூலப்பிரகிருதி 'அவ்யக்தம் என்றும், வழங்கப்படும். வியக்தம் - வெளிப்பாடு; அவ்வியக்தம் - வெளிப்பாடின்மை. இங்ங்ணம் இது வெளிப்படாது நிற்றல்பற்றி பெரும்பாலும் இதனை ஒரு தத்துவமாய்க் கூறுதல் இல்லை. அந்தக் கரணம் நான்கு என்றோம். அந்தக்கரணம் - அகக்கருவி. அவை. சித்தம், புத்தி, அகங்காரம், மனம் என்பவையாகும். . (அ) சித்தம்: அவ்வியக்தமாய் நிற்கும் மூலப்பிரகிருதி யின் ஒரு பகுதியில் வெளிப்படாது சூக்குமமாய் நிற்கும் முக்குணங்கள் துலமாய் வெளிப்பட்டுத் தம்முட் சமமாய நிலை ஒன்றுண்டு. இந்நிலையே குணதத்துவம் என்று வழங்கப் பெறுகின்றது; இக்குணதத்துவமே ஆன்மா ஒன்றைச் சிந்திப்பதற்குக் கருவியாய் சித்தம் எனப்படும் அந்தக் கரணமாய் நிற்கும். நன்கு தெரிந்த ஒன்றை மீளமீளச் சிந்திப்பதனாலேயே இன்பமும் துன்பமும் உண்டாகின்றன. எனவே, ஆன்மாவின் தன் வேதனைக் காட்சிக்கு இச்சித்தமே கருவியாதல் தெளிவாகும். -