பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 சைவசித்தாந்தம் ஓர் அறிமுகம் பிறக்கும். அவ்வாறன்றிப் புதிதாக ஒரு பொருளைக் காண நேரிடின், இஃது யாது? என்ற அவாய நிலையன்றி ஐயமும் துணிவும் தோன்றும் என்பதை நாம் அறிவோம், அப்பொழுது அப்பொருளை அறிந்தான் ஒருவன் இஃது இன்னது என்று அறிவித்தவழி துணிவு பிறக்கும். சிலசமயம் புத்தி தத்துவம் ஒரு பொருளை மற்றொரு பொருளாக மாறித் துணிதலும் உண்டு. இது துணிவு அன்று திரிவு (விபரீதம்) என்பது அதன் பெயர். புத்தி நன்மை தீமை என்ற இரண்டற்கும் பற்றுக் கோடாதலின், திரிபு இதன்கண் குற்றமாய் நின்று, பின்பு மெய்ம்மையால் போக்கப்படும் என்பது அறியப்படும். அந்தக் கரணங்களை மனம், புத்தி, சித்தம் அகங்காரம் என்று கூறினாலும், அவற்றின் தோற்றம் சித்தம், புத்தி அகங்காரம், மனம் என்னும் முறையில்தான் என்பது மேற்கண்ட விளக்கத்தால் தெளியப்படும். (i) இந்திரியங்கள் இந்திரியங்கள் என்பவை உயிர்களிடம் அமைந்திருக் கும் இயற்கை வாயில்கள். அவற்றின் மூலம்தான் உலகிலுள்ள பொருள்கள் மனத்திற்கு அறிமுகப்படுத்தப் பெறுகின்றன; அவற்றைத் தேவைக்கேற்றவாறு அநுபவிக்கவும் கருவிகளாக அமைகின்றன. - (அ) ஞானேந்திரியங்கள். இவை ஐந்து. தைசதாகங் காரத்தினின்றும் மனம் முதற்கண் தோன்றும் என்று முன்னர்க் கூறப்பெற்றது. இதனை அடுத்து ஞானேந்திரியங்கள் தோன்றும். இவை முறையே ஒன்றன்பின், ஒன்றாகச் செவி, தோல் (மெய்), கண், நாக்கு (வாய்), மூக்கு என்பவையாகும்.' 68. இவை வடமொழியில் சுரேத்திரம், துவக்கு, சட்சு, சிங்ங்வை, ஆச்ராணம் என்று கூறப்பெறும்.