பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் - 3 (பாசம்) 237 இவை முறையே புறத்தேயுள்ள ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் என்னும் ஐம்புலன்கள் மூலம் அறிவதற்குக் கருவிகளாகும். ஒளி என்பதும் உரு என்பதும் ஒன்றே. உருநிறம், வல்லோசை மெல்லோசை என்றும் வன்மை மென்மை என்றும் கைப்பு இனிப்பு என்றும், நறுமணம் தீமணம் என்றும்இவ்வாறு பகுத்தறியாமல், இஃது ஓர் ஓசை, இஃது ஒர் ஊறு, இஃது ஒர்ஒளி, இஃது ஒரு சுவை, இஃது ஒரு நாற்றம்' என்றாற்போலப் பொதுமையில் அறிவதே பொதுவாக அறிதலாகும். இவ்வாறு அறியும் அறிவு நிருவிகற்ப ஞானம் என்று வழங்கப்பெறும். நிருவிகற்பம் - வேறுபாடு இன்மை. செவி முதலிய பொறிகள் புறப்பொருள்களைப் பொதுவாக அறியுமேயன்றிச் சிறப்பாக அறியமாட்டா. மனம் முதலிய அந்தக்கரணங்கள் செயற்பட்ட பின்னர்தான் சிறப்பாக் அறிதல் நிகழும். ஒசை முதலிய ஐந்தும்" செவிமுதலிய பொறிகட்குப் புலனாகுமிடத்துப் புலன் எனப்படும். புலன் களை விடயம்-விஷயம் என்பர் வடநூலார். செவிமுதலிய ஐந்தும் அறிதற்கருவியாதல் பற்றி ஞானேந்திரியங்கள் என்று வழங்கப்பெறுகின்றன. கண்டு கேட்டு உண்டு, உயிர்த்து உற்றுஅறிதல்' என்னும் முறையிலும் ஏற்றபெற்றியால் கூறப்பெறும். இவற்றின் தோற்றமுறை மேற்கூறிவாறேயாகும். செவி முதலியன தத்துவத்தின் பெயரால் நிற்குமிடத்தில் புறத்தில் காணப்பெறும் உறுப்பைக் குறியாமல் அவ்விடங்களி லிருந்து கேட்டல் முதலியவற்றைச் செய்யும் ஆற்றல்களையே குறிக்கும். (ஆ) கன்மேந்திரியங்கள். ஞானேந்திரியங்கள் தைச தாகங்காரத்தினின்று தோன்றிய பின் வைகாரிகாகங்காரத்தி ੋ இவை முறையே வடமொழியில் சத்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம் என்று வழங்கப்பெறும். 70. குறள்-1101 (புணர்ச்சி மகிழ்தல்)