பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

** சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் f - يناير வேறொன்றுடனும் கூடாது தனித்து நிற்றல் என்பதாகும். ஒரு பொருள் வேறு எப்பொருளோடும், எவ்வாற்றாலும் தொடர்பு படாது தனித்து நிற்றலைக் கேவலம்’ என்றும், அவ்வாறின்றி எவ்வாற்றாலேனும் பிறவற்றோடு தொடர்புற்று நிற்றலை விசிட்டம் என்றும் கூறுவர் வடநூலார். இவைமுறையே தனி நிலை, தொகைநிலை என்று தமிழில் வழங்கப்பெறும். இவற் றுள் தனிநிலை அல்லது கேவலம்' என்பதே தந்மாத்திரை என்பதன் பொருளாகும். இக்காரணப்பெயர் வேறு சிலவற்றிற் கும் பொருந்துமாயினும் காரண இடுகுறிப் பெயராய் சூக்குமப் பூதங்களையே குறிக்கின்றது. தூலபூதங்கள் விசிட்டமாய்' நிற்றலின், சூக்கும பூதங்கள் கேவலமாய் நிற்கும் என்பதும் உணர்ந்து தெளியப்படும். மேலும் தெளிவாக்கம்: ஆகாயம் சத்தம் என்னும் ஒருகுணமே உடையது. வாயு சத்தத்தோடு பரிசம் என்னும் குணத்தையும் உடையது. தேயு அவ்விரண்டனோடு உருவம் என்பதுடன் மூன்று குணத்தையுடையது. அப்பு, இம்மூன்ற ளோடு இரதம் என்ற குணமும் சேர்ந்து நான்கு குணத்தை யிடையது. பிருதிவி சத்தம், பரிசம், உருவம், இரதம், கந்தம் என்னும் ஐந்து குணங்களையும் உடையது. இவற்றுள் ஒன்றின் ஒன்று ஏற்றமாகவுடைய குணம் அவ்வைம்பூதங்கட்குச் சிறப்புக் குணமாகும். அதாவது, வாயுவுக்குப் பரிசமும், தேயுவுக்கு உருவமும், அப்புவுக்கு இரதமும், பிருதிவிக்குக் கந்தமும் சிறப்புக் குணங்களாகும். ஏனையவை பொதுக் குணங்கள் இச்சிறப்புக் குணங்கள் தூலபூதங்களின் பலவகை வேறுபாட்டுடன் காணப்படும். அவ் வேறுபாடுகளையுடைய வைராய் இருத்தலே விசிட்டம் என்றும் அவ்வாறின்றிப் பொதுமையில் நிற்பதே கேவலம் என்றும் அறியப்படும். இதனை மேலும் விளக்கினால், ஆகாயத்தின் குணமாகிய