பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 260 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம்

ஆறனையும் முறையே நன்கு உணர்ந்து ஒவ்வொன்றாகக் கடந்து சென்றால் இறைவனை அடையலாம். ஆறு அத்து வாக்களுள் மந்திரம் முதலியவை ஒன்றில் ஒன்று அடங்க, இறுதியில் எல்லாம் பஞ்சகலைகளுள் அடங்கி நிற்றலைத் தெளியலாம். அதனால் நிருவான தீக்கையில் ஆன்மாவைத் தூய்மை செய்வதற்கு ஆசாரியர் செய்யும் அத்துவா சோதனையை 'கலா சோதனை' என்று வழங்குவர்.

(ஆ) பஞ்ச கலைகள்: தத்துவமும் தாத்விகமும் ஆகிய சொற்பிரபஞ்சம் அனைத்தும் சுத்தமாயையின் வியாப் பியம் ஆகலின் அவற்றிற்கு நிலைக்களமாகச் சுத்தமாயை களாக விருத்திப்பட்டு அவற்றைத் தாங்கிநிற்கும். அவை முறையே சாந்தியதீதை, சாந்தி, வித்தை, பிரதிட்டை, நிவிர்த்தி என்பவையாகும். இவற்றை முறையே சுத்தமாயை யின் முதலாம் விருத்தி, இரண்டாம் விருத்தி முதலியனவாம்.

(1) நிவிர்த்திகலை: ஆன்ம தத்துவம் இருபத்து நான்கில் பிருதிவி தத்துவம் ஒன்று மட்டுமே இதில் அடங்கும். பதங்களின் இறுதியிலுள்ள இருபத்தெட்டு எழுத்துகளில் இறுதி எழுத்தாகிய கூடிகாரம் ஒன்றும், மந்திரங்களில் இருதயம், சத்தியோ சாதம் என்னும் இரண்டும், புவனங்கள் நூற்றெட்டும் இக்கலையில் அடங்கி நிற்கும். இக்கலைக்குரிய வாக்கு தூல வைகரி. இது பிறர் செவிக்குக் கேட்பதாகும்.

(ii). பிரதிட்டாகலை: பிருதிவிக்கு மேல் உள்ள இருபத்து மூன்று தத்துவங்களும், இதில் அடங்கும். பதங்களில் மேற்கூறியவற்றிற்கு மேலுள்ள இருபத்தொரு பதங்களும், எழுத்துகளில் முன்நுதலியவற்றிற்கு மேல் உள்ள (ஒடுக்க முறையில் ளகரம் முதல் டகாரம் ஈறாக) இருபத்து நான்கும், சிரம், வாமதேவம் என்ற மந்திரங்களும், புவனம் ஐம்பத்தாறும் இதில் அடங்கி நிற்கும். இக்கலைக்குரிய வாக்கு சூக்கும வைகரி. இது தன் செவிகட்கு மட்டிலும் கேட்கும்.