பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

346 சைவசித்தாந்தம் ஓர் அறிமுகம் jo வழங்குகின் றாய்க்குன் அருளா ரமுதத்தை வாரிக்கொண்டு விழுங்கு கின்றேன்.விக்கி னேன்வினை யேன்என் விதியின்மையால்' என்று குறிப்பிடுவதையும் காணலாம். ஆகவே, இந்நிலை வாய்த்தல் அரிதினும் அரிதாகும் என்பதை அறிந்து கொள்ள முடிகின்றது. (5) தசகாரியம் சீவன்முத்தி நிலையை விளக்கும்போது ஞானத்தின் படிநிலைகளைக் கண்டோம். இவற்றையே சித்தாந்தம் வேறொரு வகையில் பத்தாகப் பகுத்து தசகாரியம்’ என்று குறிப்பிடும். இது ஞானச் செய்தி என்றும் வழங்கப்பெறும். இதனை ஈண்டுத் தெளிவறுத்துவோம். "ஞானம் என்பதற்கு அறிவு” என்பது பொருள். ஆயினும் தத்துவ நூல்களில் அது பொருளியல்பை உள்ளவாறு உணரும் உணர்வுக்கே குறியீடாக வழங்கும். அறிதல் என்னும் அளவில் சரியை, கிரியை, யோகம் என்பனவும் ஞானமேயாயினும் சைவசித்தாந்தம் இவற்றை ஞானம் எனக் கொள்ளாது பொருளியல்பை உள்ளவாறு உணரும் உணர்வை - தத்துவ உணர்வையே "ஞானம்’ எனச் சிறந்தெடுத்தும் கூறுதல் இக்கருத்துபற்றியே யாகும். விரும்பும் சரியை முதல் மெய்ஞ்ஞானம் நான்கும் அரும்புமலர் காய்கனிமேல் அன்றோ பராபரமே!’ என்று தாயுமான அடிகள் சரியை முதலியவற்றையும் ‘மெய்ஞ்ஞானம்' என்றது. மெய்ப்பொருளை ஒருவாற்றான் 51. மேலது அடைக்கலப்பத்து - 10 52. தா.பா. பராபரக்கண்ணி.157