பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடு பேறு 353 பகல் இல்லை; எதுவுமே இல்லை. இதுவே சிவ போகம் என்பது அறிந்து தெளியப்படும். இதற்குமேல் ஆன்மா அடைய வேண்டிய பயன் யாதொன்றும் இல்லை. இச்சிவானந்தத்தை இடையறாது அநுபவித்தற்கு உடம்பு ஒரு சிறு தடையாகும். அது நீங்கினால் நிறை பேரின்ப நிலையாகிய பரமுத்தி நிலை வாய்த்து விடும் என்பது அறியப்படும். இங்ங்னமாகக் கூறப்பெற்ற தசகாரியங்கள் மேற் கூறியவாறு முறையாகக் கூறப்பெற்றனவாயினும், அவை ஒன்று நிகழ்ந்து முடிந்த பின்னர்தான் மற்றொன்று நிகழும் என்று கருதவேண்டா. ஒன்று பெரிதும், மற்றொன்று சிறிதும், இன்னொன்று அதனிற் சிறிதுமாக எல்லாமே உடன் நிகழ்வனவாகும். ஆகவே பெரிதாய நிலை பற்றியே பெயர் கூறப்பெறுவது என்று தெளியப்படும். எனவே, கீழ் கீழ் உள்ளவை நிலைபெறுதல் மேல் மேல் உள்ளனவற்றினால் ஆகும். ஆகவே தத்துவ தரிசனத்தால் தத்துவரூபம் நிலைபெறும். ஆன்மரூபத்தால் தத்துவ தரிசனம் நிலைபெறும். ஏனையவற்றையும் இவ்வாறு முறைப்படுத்தி அறிந்து தெளியலாம். இதனை ஓர் எடுத்துக்காட்டால் தெளியலாம். மலைமீது ஒரு பேருந்தில் செல்லுங்கால்’ சிறிது மேற்சென்றபொழுது கீழ் உள்ள பொருட்கள் தெளிவாகத் தோன்றுவதைக் காணலாம். மிகவும் மேலே சென்று விட்ட பொழுது கீழே உள்ள பொருள்கள் தோன்றாது மறைதலையும் உணரலாம். இதுபோலவே இவையும் அநுபவமாகும் என்பதை உணர்ந்து தெளியலாம். ஒரு முக்கிய செய்தி: கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை கூடுதல் என்ற நான்குமே ஞானத்தின் படிகளாகும் என்பதை நாம் அறிவோம். இந்த நான்கிலும் தசகாரியங்கள் 57. திருப்பதி திருமலைமேல் பேருந்தில் ஏறுங்கால் இவ்வநுபவத் தைப் பெறுவதை நினைவுகூரலாம். -