பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

368 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் மணமும் திகழ்ந்து கொண்டிருக்கும். மலர் போன்றிருத்தல் அவசியம். அத்தகைய மனத்தை ஆண்டவனிடத்து ஒப் படைப்பதற்கு அறிகுறியாகக் கையால் வழிபடும் ஒருவர் மலரை எடுத்து இறைவன்மீது துவுகின்றார்; அங்கையால் - அழகிய கையால் -துவுகின்றார். அக்கையால் செய்யப் படுகிற சிறந்த செயலை அங்கைகொடு மலர்தூவி' என்கின்றார் தாயுஆமாணவ அடிகள். உள்ளத்தில் உண்டாகும் உணர்ச்சி உடலில் உண்டா கின்ற சில மாறுதல்கள்மூலம் வெளியாகின்றது. அவ்வாறு வெளிப்படுவதைப் புளகிப்பு என்பர். அன்பால் அல்லது ஆனந்தத்தால் உண்டாகும் புளகிப்பு உடலைப் பண்படுத்தித் தூயதாக்குகின்றது. உள்ளத்தில் அரும்பும் உணர்ச்சிகள் அனைத்திலும் சிறந்தது, உயர்ந்தது இறைவனிடத்துக் கொண் டுள்ள பேரன்பு. அஃது ஆனந்தமாக, வடிவெடுத்து வெளிப் படுங்கால் அதன் புறச்சின்னம் உடலிலும் தென்படுகின்றது. இத்தகைய தோற்றத்தை அங்கமது புளகிப்ப' என்று குறிப்பிடுகின்றார் அடிகள். . - உடலும் உள்ளமும் உருகுவதற்குரிய காரணங்களில் அன்பினால் உருகுவது சிறந்தது. அப்பொழுது அது வெண்ணெய் உருகுவதற்கு ஒப்பாகி மாசு நீங்கிய மணம் நிறைந்த நெய்போல, மனிதனிடத்துக் கடவுளன்பும் அதற்கு ஒப்பான தூய அன்பும் உண்டாகுமானால் அவன் உருகி உயர்ந்த மனிதனாக வடிவெடுத்து மேலோனாக மாறுகின்றான். இவ்வாறு மாறி அமைவதை அன்பினால் உருகி’ என்கின் றார் அடிகள். - கண்ணீர் வடிப்பது உயிர்களின் செயல், உள்ளத்தில் உண்டாகும் மாறுபாடுகளுக்குச் சிந்துகின்ற கண்ணீர் அதன் புறச் சின்னமாகின்றது. இன்பக் கண்ணீர் அருள் தாகத்தால்