பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

378 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் தேர்த்திருவிழா ஒவ்வோர் ஆலயத்தோடும் சம்பந்தப் பட்டதாக இருப்பது தேர்த்திருவிழா என்பது ஒன்று. ஆலயம் என்னும் சின்னத்தின் மற்றொரு பகுதியாக இஃது அமைந் திருப்பது. ஓடுதல் என்னும் செயலில் தேர் உடல் தத்து வத்தை நன்கு விளக்குவது. உடலைத் தேர் என்றும் அதன் உள்ளிருக்கும் ஆன்மாவை கதி அல்லது ஊர்ந்து செல்லுப வன் என்றும் கருதவேண்டும் என்பது ஞான சாத்திரங்கள் புகட்டும் உண்மை. உடலிலுள்ள இயல்புகளையெல்லாம் தேரில் அமைப்பதும் வழக்கமாக இருந்து வருகின்றது. ஒன்று நிலைத்து நிற்கும் சின்னம். மற்றது இயங்குகின்ற சின்னம். இவற்றின் மூலம் விளக்கப்பெறும் கருத்து ஒன்றே என்பது உணரப்படும். பலிபீடம்: இராசகோபுரத்தை அடுத்து நம் கண்ணில் விழுவது பலிபீடம். அதன் அருகில் சென்று வீழ்ந்து வணங்குதல் மரபு வீழ்ந்து வணங்கும் பொழுது மனிதன் “தனது கீழான இயல்புகள் அனைத்தும் அந்த இடத்தில் பலிகொடுக்கப் பெற்றன; இனி அவை தன்னை எடுப்பதற்கு வாய்ப்பு இல்லை' என்று ஆழ்ந்து எண்ணுதல் வேண்டும் மேன்மையும் மேலான எண்ணமும் எஞ்சியுள்ளன என்னும் எண்ணத்துடன் எழுந்திருத்தல் வேண்டும். இந்த எண்ணத்தின் வலிவு அவன் புதிய தொரு பிறவி எடுத்துக் கொண்டதற்குச் சமமாகின்றது. புதிதாக வருவித்துக் கொண்டுள்ள மேலான மனப்பான்மையை இனி இந்த தெய்வத்திற்குரியதாக மாற்றி விடுதல் வேண்டும். திருக்கோயிலினுள் வலம்வருதல் இதன் குறியீடாக அமைந்தின்று. . வலம் வருதல்: பக்தன் வலம் வரவேண்டிய முறையை அடுத்த நிலையிலிருக்கும் கொடிக் கம்பம் விளக்கு கின்றது. திருக்கோயிலைச் சுற்றி வலம் வருங்கால் உள்ளிருக்