பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/415

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

400 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் (6) கடமை-பலன்கள் உடலைப் பேண விரும்புபவன் தானே உண்பது போலவும், கல்வி கற்பவன் தானே முயன்று கற்பது போலவும் ஆன்ம சாதனமும் சுயமுயற்சியால் நடைபெறுதல் வேண்டும். துணை செய்வதுடன் பிறர் பங்கு நின்று விடுகின்றது. அறிவு தன்னுடு வளர்ந்து வர வேண்டிய பூசா தத்துவம் முழுவதும் ஆன்மசாதனத்தை ஒட்டியது. ஆதலால் சாதகன் தன் இயல்புக்கு ஏற்றவாறு அதைத் தனக்குத் தானே செய்து கொள்ளல் வேண்டும். பொருளை வாரி இறைத்து பெருமிதமாகச் செலவிடுவ தால் பூசை பெரியதாய் விடாது என்பது உளங் கொள்ளப்படும். தற்பெருமைக்காக என்று வீண் விரயம் செய்வது இறைவ னுக்கு ஏற்காது. பொருளுடையோர் அதைத் தங்களுக்கென்று வைத்துக் கொள்ளாது மற்றவர்க்கும் இறைவன் பெயரால் பகுத்துக் கொடுக்குங்கால் அதனால் பயன் உண்டு. பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை (குறள் - 322) என்பது வள்ளுவர் வாக்கன்றோ? ஆராதனைகளுள் சமாரா தனை மிகவும் முக்கியமானது என்பதை அறிய வேண்டும். மனப்பான்மையே பூசையில் முக்கியமானது. கண்ணப்பு நாயனார் வாழ்க்கையை நோக்கலாம். அவர் வழிபாட்டிற்காக கையாண்ட பொருள் போற்றத் தக்கதன்று. அப்படியிருந்தும் அஃது இறைவனுக்கு உகந்ததாயிற்று. அங்ங்னமே குகன் பெருமான் இராமபிரானுக்கு “தேனும் மீனும் படைத்ததும், அவற்றை அப்பெருமான் ஏற்றதும் நினைவு கூரத்தக்கவை. இந்த இரண்டு இடங்களிலும் உயர்ந்த மனநிலையே பூசனைக்குக் காரணம் என்பது தெளிவு. அன்பும், ஊக்கமும், பணிவும் பூசனைக்கு ஆதாரமாகின்றன. மனம் பண்படுவதே