பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிபாட்டு முறைகள் 399 சடங்குகள்: இப்பூசையில் மேற்கொள்ளப்பெறும் சடங்குகள் யாவும் ஆன்மசாதனத்தில் பல்வேறு இயல்புகளை விளக்குபவையாய் அமைந்துள்ளன. இறைவனுக்கு இவை தேவையா? என்ற வினா எழுவதற்கு இங்கு இடம் இல்லை. ஏனெனில், இவை யாவும் பக்தனுக்குப் பயன்படுகின்றன. அவன் ஈசனை நோக்கி ஏகுவதற்குப் பயன்படுபவைகளாய் அமைந்தவை இவை. உயிர்கள் இறைவன் மாட்டு இட்டுக் கொண்டு போதலே இயற்கையின் தொழில் ஆதலின் இயற்கையை இறைவழிபாட்டில் பயன்படுத்துவதே மனிதன் அதைக் கொண்டு செய்யும் அரும் பெருஞ் செயலாகும். இயற்கையைக் கையாளும் முறைக்கேற்ப மனிதன் பெருமை அல்லது சிறுமையை அடைகின்றான். பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல் (குறள் 305) என்ற பொய்யா மொழியாரின் கூற்று சாதகனுக்கும் பொருந்தும். அற்ப ஆசைகளை நிறைவேற்றுதற் பொருட்டு அதைப் பயன்படுத்தும் ஒருவன் அற்பத் தன்மை அடைகின்றான். ஈசுவர ஆராதனை போன்ற உயர்ந்த செயலுக்கு உலகப் பொருள்களைப் பயன்படுத்துபவன் ஈசுவரனின் திருவருளைப் பெறுகின்றான். மன்னிப்பு கோருதல்: மூர்த்தியின் மூலம் பாகிய பூசையை முடித்த பிறகு பக்தன் இறைவனிடம் மன்னிப்பு கோருகிறான். ஈசுவரத்துவம் தனக்கு முற்றிலும் தெளிவாக வில்லை என்றும், தன் சிற்றறிவுக்கு எட்டியவாறே ஆரா தானை செய்யப்பெற்றது என்றும், அத்தகைய ஆராதனையில், குற்றம் குறைகள் இருப்பின் மன்னித்தருள வேண்டும் என்றும் வேண்டுகின்றான். திருமேனியில் அல்லது படத்தில் ஆவிர்ப் பித்துள்ள இறைவன் பழையபடியே தன் உள்ளத்துள் எழுந்தருளுமாறு வேண்டுகின்றான்.