பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் பெறுகின்றன. ஆகவே, இந்த முப்பொருள்களுள் ஒன்றை மற்றொன்றின் காரியம் என்னாது மூன்றும் தனித் தனிப் பொருள்களே என்று கொள்ளுதலே பொருந்துவதாகின்றது என்பது தெளிவு. இனி () இல்லது தோன்றாது, உள்ளது அழியாது' என்ற சற்காரியக் கொள்கையின்படி மாறுபட்ட மூன்று தன்மைகளால் வேறுவேறாகத் தோன்றும் மூன்று பொருள் களையும் யாதொன்றினையும் ஒரு காலத்தில் தோன்றிற்று' என்றோ ஒரு காலத்தில் அழியும் என்றோ கூறுதல் கூடாது. ஆகலின் இந்த முப்பொருள்களும் அநாதி நித்தியப் பொருள்களாகக் கொள்ள வேண்டியதன் இன்றியமையாமை தெளிவாக்குகின்றது. இன்னும் (ii) மாறுபட்ட பலதன்மை ஒரு பொருளின்கண் இருத்தல் இயலாது' என்பதும் ஒரு சித்தாந்த உண்மையாகும். அதாவது தட்பமும் வெப்பமும் போன்ற தன்மைகளும் உண்மையும் இன்மையும் போன்ற மாறுபட்ட தன்மைகளும் ஒரு பொருளிடத்தே இருத்தல் இயலாது. இவண் குறிப்பிட்ட இரு முடிவுகளின் அடிப்படை யில் பதி, பசு, பாசம்’ என்ற முப்பொருள்களும் உள்ளன என்பதும் அவை மூன்றம் அநாதி நித்தியப் பொருள்கள் என்பதும் நிலை பெற்ற உண்மை முடிவுகளாகும் என்பது இனிது தெளியப்படும். படைத்தல், அழித்தல் பற்றி இவை பற்றிய விளக்க மும் தேவை. உலகம் என்பது காரணப் பிரபஞ்சம்', 'காரி யப் பிரபஞ்சம் என இருவகைப்படும். காரணப்பிரபஞ்சம் 'மண் பொன் போல்வது காரியப் பிரபஞ்சம் குடம் அணி போல்வது. குயவன் மண்ணிலிருந்து குடத்தையும், பொற் கொல்லன் பொன்னிலிருந்து அணியையும் தோற்றுவித்தலன்றி அவர்கள் மண்ணையோ பொன்னையோ தோற்றுவித்தல் இல்லை. ஆகவே, இறைவன் படைக்கிறான், அழிக்கிறான்.