பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் - 1 (பதி) 55 பிறந்து பின் இறந்து உழலும் நிலையினின்றும் நீங்கிச் செய லற்றிருக்குமாறு தனு கரண புவன போகங்களைப் பிரித்து விடுதலே அழித்தல் ஆகும். ஆகவே பிறப்பு இறப்புகளில் உழலுகின்ற இளைப்பு நீங்குதலே அழித்தலின் பயனா கின்றது. இங்ங்னம் இறைவனது முத்தொழில்களும் உயிருக்குப் பயன்படுவதை அறிந்து தெளியலாம். ஐந்தொழில்கள். இக்கூறிய முத்தொழில்களைத் தவிர 'மறைத்தல், அருளல் என்ற வேறு இரண்டு தொழில்களை யும் சைவ சித்தாந்தம் பேசும். உயிர்களின் அறிவை மறைப்பது ஆணவ மலம்' இதன் மறைக்கும் ஆற்றலைத் தூண்டி, மாயை கன்மங்களால் உலக இன்பத்தைத் தோற்றுவித்து, இறைவன் உயிர்கட்குத் தன்னைக் காட்டாது உலகத்தையே நோக்கியிருக்கச் செய்தலே மறைத்தல் ஆகும். இச் செய லால் ஆணவமலத்தின் ஆற்றல் நாளடைவில் குறைந்து ஒடுங்கி விடும். இதுவே மறைத்தலின் பயனாகின்றது. ஆணவமலத்தின் ஆற்றல் ஒடுங்கியவுடன் உயிர்கட்கு இறைவனை நாடும் விருப்பம் நிகழும். அப்பொழுது இறைவன் தன்னைக் காட்டி உயிர்களை மலங்களினின்றும் நீக்கித் தன்னை அடைவித்தலே அருளல் ஆகும். ஆகவே, இறைவன் திருவடி இன்பமாகிய பேரின்பத்தைப் பெறுதலே அருளல் தொழிலின் பயனாகின்றது. இக்கூறியவற்றாலும் மேலே கூறிய மூன்றாலும் இறைவனது தொழில்கள் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என ஐந்தாகின்றன. இவை ஐந்தும் ஆருயிர்களின் பொருட்டு இறைவன் செய்யும் ஐந்து அருட்டொழில்கள் என்பது தெளியப்படும். 30. இதன் இயல்புபற்றிய விரிவான விளக்கம் தத்துவங்கள்.3 என்ற தலைப்பின்கீழ் தரப்பெற்றுள்ளன.