பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கேவல அவத்தை

கேவல வகை


கேவல அவத்தை - அவத்தையில் ஒருவகை, புற உலகத்தை ஆன்மா அறியாவிட்டாலும், அந்நிலையில் ஆணவ இருள் மேலிட, அது அறியாமையில் அழுந்தும், பா. காரண அவத்தை, காரிய அவத்தை, மேலாலவத்தை, கீழாலவத்தை.

கேவல அன்வயம்-புகையுள்ள இடத்தில் நெருப்புண்டு என்று உடன்பாடுபற்றிச் சமையற் கட்டினை உவமை கூறுவது. அன்வய அனுமானம் 5 உறுப்புகளைக் கொண்டது. 1) மேற் கோள் 2) ஏது 3) எடுத்துக் காட்டு 4) உபநயம் 5) முடிவு.

விளக்கம்

1) இம்மலையில் தீயுண்டு - மேற்கோள். 2) புகை உடைமையால் ஏது. 3) அங்கே தீ உண்டு அடுக்களை போல் எடுத்துக்காட்டு. 4) இங்கே புகை உண்டு. உபநயம் 5) எனவே, இங்கே தீ உண்டு - முடிவு. ஒ. கேவல வயதிரேகம்

கேவல ஞானம் - சிறப்பறிவு.

கேவல சாக்கிரம்- இதில் தத்துவதாத்துவிகங்கள் (50) செயற் படா. ஆகவே, ஆன்மா விழித் திருக்கும். இருப்பினும், அது கண்டும் காணாததுபோல் இருக்கும். வேறுபெயர் அறிவிலாச்சாக்கிரம்.

கேவல சுழுத்தி} - சித்தம், உயிர் வளி ஆகிய இரண்டும் ஆன்மாவுடன் கூடி, இதயத்தானத்திலே நின்று இன்பமாய்த் தூங்கும் நிலை.

கேவல சொப்பனம் - முன் நுகர்ந்த போகத்தை நினைப்பதும் தற்காலத்திலே வரும் நுண்ணுடம்பு,போகம் ஆகியவை ஆணை ஏறி, மாலை சூடுதல் முதலியவற்றை நுகர்தல்.

கேவல சைதன்யம் - ஆன்ம ஞான வடிவமாகவுள்ள நிலை கேவல துரியம்-சித்தம் நீங்கும். உயிர் வளியுடன் ஆன்மா கூடி நாபியில் நின்று, ஒன்றும் தெரியாது தூங்கும் நிலை.

கேவல துரிய அதீதம் - உயிர்வளி நீங்கும். ஆன்மா தனித்து மூலா தாரத்தில் ஆணவமலத்துடன் கூடி, ஒர் அறிவும் அறிந்திருக்கும் நிலை.வேறு பெயர் நித்திய கேவல அவத்தை,கீழாலவத்தை

கேவல வகை- இதன் வகைகளாவன.

1.அருட்கேவலம் : தத்துவங்கள் எல்லாம் நீங்கி, அருளோடு கூடும் நிலை. இந்நிலையில் பாச ஞானமும் பசு ஞானமும் நீங்கி அருளாய் நிற்கும். அருள் மேவிநிற்பதால், அருள் கேவ லம் எனப்படும். 2.சகல கேவலம் : அனாதி கேவ லத்தில் நிற்பது. பின், அதிலி ருந்து நீங்கி உடம்பு பெற்றுச் சங்கரிக்கப்பட்ட (அழிக்கப் பட்ட பின்னர்ப் புதுப்படைப் புக்கு ஏதுவாய் ஒடுங்கி இருக் கும். அப்பொழுது, அவ்விடத் தில் மும்மலங்களோடும் கூடிப் படும் சகலருக்குரிய கேவலம்.

3.பிரளய கேவலம் அனாதி கேவ லத்தினின்றும் நீங்குவது பின், உடம்பு பெற்றுச் சங்கரிக்கப் பட்ட பின்னர்ப் புதுப்படைப் புக்கு ஏதுவாய் ஒடுங்கி இருக் கும். அப்பொழுது, அவ்விடத் தில் மாயையோடு பொருந்தாது. ஆணவம், கன்மம் என்னும் இரண்டோடும் கூடிப் படும் பிரளயாகலருக்குக்குரிய கேவலம்.

98