பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுத்தாட்டகம்

சுபம்


சுத்தாட்டகம்- நிலம், நீர், நெருப்பு, காற்று என்னும் நான்கு முர்த்த மான பூதங்களும் அவற்றிற் குரிய நாற்றம், சுவை, உருவம், ஊறு என்னும் நான்கு உபாதானங்களும் கூடிய எட்டின் கூட்டம் (4+4=8,.

சுத்தாத்துவா - விந்து வில் உண்டாகும் பிரபஞ்சம்.

சுத்தாத்துவைதம்- சீவான்மா, பரிமான்மாவுடன் கூடிய எட்டின் கூட்டம்.

சுத்தாவத்தை- நின்மலசாக்கிரம், நின்மல சொப்பனம் நின்மல சுழுத்தி, நின்மலதுரியம், நின்மல துரியாதீதம் என ஐவகை இது மலம் நீங்கிப் பிறவியற்று ஆன்மா சுத்தமாயிருக்கும் நிலை.

விளக்கம்

1) நின்மல சாக்கிரம்; சுத்த சாக்கிரம், சத்தாதிப பொருள்கள் சிவா காரமாகவும் பொருள் நுகர்வுகளைச் சிவ இன்பமாகவும் நுகர்தல்

2) நின்மல சொப்பனம்; சுத்த சொப்பனம். இது சிவோகம் பாவனையே.

3) நின்மல சுழுத்தி; சுத்த சுழுத்தி ஞாதுரு ஞானம், ஞேயம் ஆகிய மூன்று இன்பம் நுகர்தல்.

4) நின்மல துரியம்; கேவல ஞான மாத்திரமாய் இருத்தல்.

5) நின்மல அதீதம்; சுத்த அதீதம். நிறைசிவ இன்பத்தை இரண்டறப் பெற்றிருக்கும் நிலை.

சுந்தரத்தாள் - உமை.

சுந்தரர் - ஆதிசைவர். சிறப்புப் பெயர்கள்; அருளுடை நம்பி, வண்தொண்டன் தம்பிரா தோழர், சேரமான் தோழர் திரு நாவலுர் நடுநாடு. சிவனுடன் தோழமை பூண்டு தலந்தோறும் சென்று திருப்பதிகங்கள் பாடி சைவநெறி தழைக்கப் பாடுபட்டவர். திருவாரூர் மதவாகிரி தேவாசிரியா மண்டபத்தில் திருத்தொண்டர் தொகைபாடி அடியார் வரலாற்றை உலகறியச் செய்தவர். இது பெரிய புராணம் தோன்ற வழிவகுத்தது குருவழிபாடு. நால்வரில் ஒருவர். வேறுபெயர் சுந்தர மூர்த்தி நாயனார். இவர் வாழ்க்கை தோழமை நெறிக்கு எடுத்துக் காட்டு, முத்தியடைந்த வயது 18. காலம் கி.பி. 8ஆம் நூற்றாண்டு. முதலில் பாடியபதிகம் "பித்தா பிறை" இறுதியாகப் பாடியது 'தானெனைமுன்’ சூடி பாடிய பதிகத் தொகை 38,000. இன்றுள்ள பாடல்கள் 1038. திருமுறை7. சுந்தரர் செய்த அற்புதங்கள்; 1) செங்கற்களைப் பொன்னாகப் பெற்றுக் கொண்டது. 2) சிவ பெருமான் கொடுத்தருளிய 12,000 பொன்னை விருத்தாசலத்திலுள்ள ஆற்றிலே போட்டுத் திருவாரூர் திருக்குளத்தில் எடுத்தது. 4)காவிரியாறு பிரிந்து வழிவிடச் செய்தது. 5) முதலை உண்ட பாலனை அம்முதலை வாயினின்று மீட்டுக் கொடுத்தது. 6)பரவைக்காகதச் சிவபெருமானைத் தூதுராக அனுப்பியது. 7) வெள்ளையானையில் ஏறிக் கொண்டு திருக்கயிலை சென்றது.

சுபக்கம்- தன்பக்கம்.ஒ.பரபக்கம் எ.டு.சிவஞான சித்தியார் சுபக்கம்.

சுபம் - மங்கலம். இன்ப முடிவு. எ-டு நீதியால் நித்த கன்மம் நிகழ்ந்திடச் சுபத்தை நீங்கார் (சி.சி.ப.ப. 191).

128