பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேர்த்தி

சைவ அறநெறி


சேர்த்தி - கலந்து. எ-டு அரக்கொடு சோத்தி.

சேர்வை -சேர்க்கை எ-டுசிறப்பில்லார் தம் திறத்துச் சோவை.

சேலினார் - மீன்கள். எடு சேலினார் தமைப் பிடித்து (சிசிப்ப 280)

சேவடி - சிவந்த அடி. எ-டு சேவடி, சேரல்.

சேவுயர் கொடியோன்- இடபக் கொடியுள்ள சிவன்.

சேவை - தரிசனம், தொண்டு, எ-டு கருட சேவை. சேறல் - செல்லுதல்,

சை

சைகதிகன் - சமணன்.

சைதன்யம் - மலம் நீங்கிய சுத் தான்மாவின் அறிவு ஐந்து. தத்துவத்தில் ஒரு வகை

சைதன்ய சொரூபி - மலம் நீங்கிய சுத்த ஆன்மாக்களின் அறிவையே தனது வடிவமாகக் கொண்டிருக்கும் இறைவன்.

சையுத்த சமவாயம் - சையோகத் தொடர்பு உடையதில் ஒற்றுமை கொண்டது. இத்தொடர்புடையது குடம். இதில் ஒற்றுமை உடையது குட உருவம்.

சையுத்த சமவேத சமவாயம் - சையோகத் தொடர்புடைய தோடு கூடியதன் கண் ஒற்றுமை உடையது. இத் தொடர்பு உடை யது குடம். இதனோடு தொடர் புடையது குடஉருவம். அதன் கண் ஒற்றுமை உடையது அதன் தன்மை .

சையோகம் - மானதக் காட்சி யில் ஒரு நிலை). எ-டு கண்ணால் குடத்தைக் காணல்..

சைமினி - மீமாஞ்சக மதா சாரி யன் வைசேடிக சமயத்தைத் தோற்றுவித்தவன்.

சைவத்திறம்- சைவ சித்தாந்தம்.

சைவம், சைவ சமயம் - பொருள்; சிவனை முழுமுதற் கடவு ளாகக் கொண்ட சமயம் , நுவல் பொருள் முப்பொருள் பற்றி விரிவாக பேசுவது. தொன் மை; நெடிய தொன்மை வாய்ந் தது. இருக்குவேதத்திற்கு முற் பட்டது. தொல்காப்பியம், அகநானூறு, புறநானூறு முதலிய பண்டைத் தமிழ் இலக்கியங்களில் சைவ சமயம் இடம் பெறுகின்றது. சிவன் நிலை; வேத காலந்தொட்டுச் சைவ நாயன்மார்கள் காலம் வரை முழுமுதற் பொருள் நீக்கமற நன்கு வழங்கப்பட்டு வந்துள்ளது. அழித்தலோடு ஆக்குதலும் துன்ப நீக்கத்தோடு இன்ப ஆக்கமும் இணைந்த ஒன்றாகவும் !, ரம் பொருளுக் குரியதாகவும் காலந்தோறும் கருதப்பட்டு வந்துள்ளன. சைவம் 16; வேறு பெயர் சோடச சைவம், 1) ஊர்த்த சைவம் 2) அநாதி சைவம் 3) ஆதி சைவம் 4) மகா சைவம் 5) பேத சைவம் 6) அந்தர சைவம் 7) குணசைவம் 8) நிர்குணசைவம் 9) அத்துவா சைவம்10) யோகசைவும் 17) ஞான சைவம் 12} அனு சைவம் 13) கிரியா சைவம் 14) நாலுபாத சைவம் 15) சுத்த சைவம் 16) அபேத சைவம்,

சைவ அறநெறி- உயிர்களைக் காப்பாற்ற இறைவன் நஞ்சுண் டதும், சைவர் திருநீறு உருத்தி ராக்கம் அணிவதும், அவன் காட்டும் அன்பு ஆகியவை சைவ அறநெறி சார்ந்தவை.

133