பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

செழும்புனல்

சேரமான் பெருமாள் நாயனார்


செழும்புனல் - ஆற்று வெள்ளநீர்,

செழுகிரி - மலை.

செழுநவை அறுவை -மெல்லிய அழுக்குடை ஆடை. .

சௌபல்யம் - எளிமை.

செற்பை - வாத உத்திகளில் ஒன்று, மற்ற மூன்று வாதம், விதண்டை ஏது. பிறர் விருப்பம் நீக்கித் தன் நோக்கம் தோன் றாமல் வாதிடல்,

செற்ற - வெறுத்தற்குரிய

செறிந்தறிதல் - அழுத்தியறிதல்

சென்ற நெறி - ஐம்பொறி வழிச்செல்லுதல்,

சென்னி - 1) மண்டை முனை 2} தலைமேல். எ-டு சென்னி வைப்பாம்.

செனிப்பு - உண்டாதல்.

சே

சேகரம் - அழகு. ஈசுவரனோடு கூடியது.

சேகர சாங்கியம் - யோக மதம். கடவுள் உண்டு என்னுங் கொள்கை.

சேக்கிழார் --முப்புராணங்களில் சிறப்புப் புராணமான பெரிய புராண ஆசிரியர், உரிய பெயர் திருத்தொண்டர் புராணம், 12ஆம் திருமுறை

சேசுவர சாங்கியன் - கடவுள் உண்மையை ஒப்புக்கொள்ளும் சாங்கியமதவாதி.

சேடம் சேடியா பாவகம்- அடிமையும் முதல்வனும் என்று எண்ணும் பாவனை, அதாவது, ஆண்டான் அடிமைத் திறம்

சேடம் - அடிமை, குறை

சேடன் - அடிமை, தோழன், பாங்கன், சிவனுக்கு ஆன்மா சேடன் ஆகும்.

சேடாசேடிய பாவகம் - அடிமை யும் முதல்வனும் என்னும் பாவனை.

சேட்டிதன் - காரணன், சிவன், எ-டு சித்துடன் அசத்திற்கு எல்லாம் சேட்டிதன் ஆதலால் (சிசிசுப 76)

சேட்டித்தல் - தொழிற்படுதல்

சேட்டை - தொழில், குறும்பு. எ-டு உலகின்தன் சேட்டை (சிசிசுப 236).

சேடி- தோழி, பாங்கி.

சேணில் - அந்தி வானில்

சேதனன் - அழிப்பவன்.

சேதனம் - அறிவுடைப்பொருள். நுண்பொருள் ஒ. அசேதனம்.

சேதனப்பிரபஞ்சம்-- அறிவுலகம். அறிவுடை உலகம். ஒ. அசே தனப் பிரபஞ்சம்.

சேதிப்ப - வெட்ட. எ-டு தாளிரண்டும் சேதிப்ப

சேதிராயர் - 9 ஆம் திருமுறை பாடிய 9 பேர்களில் ஒருவர்.

சேந்தனார் -1) இறைவன் 219 ஆம் திருமுறை பாடிய 9 பேரில் ஒருவர்,

சேந்தினார் செயல் - பா அவிழ

சேய்மை - தொலைவு,

சேரல் - அடைதல்

சேரமான் பெருமாள் நாயனார் - 11ஆம் திருமுறையில் பொன் வண்ணத்து அந்தாதி, திருவாரூர் மும்மணிக் கோவை, திருக்கை லாய ஞான உலா ஆகிய மூன்றையும் பாடியவர், பா, கழறிற்றறிவார் நாயனார்.