பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பசுஞானம்

பஞ்ச கலைகள்


ஏற்கும் முப்பொருள்களில் இரண்டாவது. இதுபற்றிச் சிவஞான போதமும் சித்தியாரும் பேசுகின்றன. பசு உண்டு என்று நிறுவி, அதன் தன்மை, பன்மை ஆகியவை பற்றிச் சைவசித்தாந்தம் எடுத்துரைக்கிறது. பதியும் பாசமும் வீட்டுநிலையில் தம் பெயர் நீங்கி முறையே முத்தன் எனவும் அருள் எனவும் அறியப்பெறும் என்று சிவ ஞானமுனிவர் கூறுகின்றார். பார்க்க: பதி, பாசம்.

பசுஞானம் - உயிர் அறிவு, காட்டும் ஒளியாகிய விளக்கொளி போன்றது.

பசுத்துவம் - பசுதத்துவம் பாசத்தால் உயிர் கண்டுகொண் டிருக்கும் தன்மை.

பசுந்தேன் ஞானம்- பசிய இறையறிவு.

பசுரீநீகாரம் - பசுவின் அறிவை மூடல்.

பசு புண்ணியம் - உயிர்களை நோக்கிச்செய்யப்படும் நல்வினை.

பசுபதி - இறைவன், சிவன்.

பசுப்பான் - ஒருவன் அடையும் இன்பம்.

பசுபோகம் - ஆன்ம நுகர்ச்சி, சமயப் பொருள் எட்டில் ஒன்று, பா. சமய பதார்த்தம்.

பசுபோதம்- ஆன்ம அறிவு, அகங் காரமமகாரங்கள், பா.தற் போதம்.

பசுவர்க்கம் - உயிர்வர்க்கம்.

பசுவர்க்கம் மூன்று- விஞ்ஞானகலர், பிரளாயகலர், சகலர்

பசுவின் மலம் - உயிர்மலம்.

பஞ்சு- ஐந்து.

பஞ்ச அங்கநமக்காரம் - முழங் கால்கள், கைகள், தலை ஆகிய ஐந்து உறுப்புகளும் நிலந் தோய வணங்குதல்.

பஞ்ச அமிர்தம்- வாழைப்பழம், தேன், சர்க்கரை, நெய், திராட்சை என்னும் இனிய பண்டங்கள் சேர்ந்தது. அபிடேகத்திற் குரியது.

பஞ்ச ஆதனம்- ஐந்திருக்கை கூர்மாசனம், அநந்தாசனம், சிங்காசனம், பத்மாசனம், யோகாசனம்.

பஞ்ச அவத்தை- ஐந்து அவத்தை.

பஞ்ச உலோகம்- பொன், வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம்.

பஞ்சகஞ்சுகம் - ஐந்து சட்டை காலம், நியதி, கலை, வித்தை, அராகம் பா. அந்தக் கரணம்.

பஞ்சகம் - ஐந்தின் கூட்டம்.

பஞ்சகந்தம் - உருவம், வேதனை, குறிப்பு, பாவனை, விஞ்ஞானம் என்னும் ஐந்து.

பஞ்சகருத்தாக்கள்- பிரமன், விட்டுணு, உருத்திரன், மகேசுரன், சதாசிவன் என்னும் 5 கருத்தாக்கள். பரசிவன் உருவங்கள்.

பஞ்சகலைகள்- ஐந்துகலைகள். சைவ ஆகமங்களின்படி உலகம் 5 பகுதிகளில் அடங்கியுள்ளது. அப்பகுதிகள் கலை எனப்படும். அவையாவன; நிவர்த்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, அதீதை

ஒவ்வொரு கலையிலும் படைப்பவன், காப்பவன் என்பவரோடு கூடஅழிப்பவனாகிய உருத்திரனும் இருப்பான். கீழக்கீழ் உள்ளவை மேன்மேல் உள்ளவரால் படைக்கவும் அழிக்கவும்படும். இக்கலைகள் உள்ள

175