பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முத்திமுதல்

மும்மூர்த்திகள் மூவர்


இவற்றில் 1-10 வரை பழிசேர் முத்தியில் அடங்கும். இவை 36 தத்துவங்களுக்கும் உட்பட்டு அவற்றின் அழிவில் நீங்குபவை. 11-12 இறையருள் சேர்க்கும் முத்திகள்.

முத்திமுதல்- முத்திக்குரிய ஆன்மா.

முத்தி மூன்று முதல்- 1) ஆன்மா பேரின்பத்தைத் தூய்ப்பது 2) இறை பேரின்பத்தைத் தருவது 3) மலம் இத்தை விளைவிப்பது.

முத்தியளிக்கும் தலங்கள்- 1) திருஆரூர் - பிறக்க முத்தி தருவது. 2) சிதம்பரம்-தரிசிக்க முத்தி தருவது 3) திருவண்ணாமலை - நினைக்க முத்தி தருவது. 4) காசி-இறக்க முத்தி தருவது.

முத்திரை - ஒரு கை, இரு கை மற்றும் கைவிரல்களைக் கொண்டு குறிப்பாக ஒரு பொருளையோ செயலையோ உணர்த்துவது முத்திரை எனப்படும். எ-டு காமதேனு அல்லது சுரபி முத்திரை. உள்ளங்கைகளைச் சேர்த்து விரல்களைப் பசுவின் மடியைக் குறிக்கும் வகையில் காட்டுவது. இது காமதேனுவின் மடியிலிருந்து பாலைப்பொழியச் செய்வதை உணர்த்துவது.

முத்திறத்து அவத்தை- காரண அவத்தை மூன்றிலும் ஐந்தவத்தை நிகழ்வதால், இதற்கு முத்திறத்து அவத்தை என்று பெயர்.

முத்திற உயிர்- பந்த வேறுபாட்டால் உயிர்கள் விஞ்ஞானகலர், பிரளயாகலர், சகலர் என மூவகைப்படுவர். பா. மூவணு ஐந்தனு.

முத்தீப்பெயர்- காருகபத்தியம், ஆகவனியம், தக்கணாக் கனியம்

முத்தொழில் - காத்தல், படைத்தல், அழித்தல் என்னும் கடவுளர் தொழில் மூன்று. பா. ஐந்தொழில்

முதுவேனில்- முதிர்ந்த வெயிற்காலம். இது ஆனி ஆடி.

முந்நிகழ்ச்சி- உடன்நிகழ்ச்சியாக வரும் மூன்று நிகழ்ச்சிகள் இருவினை ஒப்பு, மலபரி பாகம் சத்திநிபாதம்.

முப்பத்தாறு தத்துவம்- சிவதத்துவம் 5, வித்தியா தத்துவம் 7, ஆன்ம தத்துவம் 24.

முப்பத்தோர் தத்துவம் - வித்தியாதத்துவம் 7, ஆன்ம தத்துவம் 24.

முப்பூ- கோட்டுப்பூ, கொடிப்பூ, நீர்ப்பூ.

முப்பொருள்- உள்பொருள்களாகிய பதி (இறைவன்), பசு (உயிர்), பாசம் (தளை) ஆகிய மூன்றும் இம்மூன்று பொருள் பற்றிச் சிவஞான போதம் முழுமையாக விளக்கும் முதல் நூல்.

மும்மதத்தன்- கணபதி.

மும்மதம் - மதயானையின் கன்ன மதம், கைமதம், கோசமதம் என்னும் மூவகைப்பட்ட நீர்கள்.

மும்மலம் - ஆணவம், கன்மம், மாயை. இவை அணுவின் உண்மையினை மறைக்கும். பொய்மை செய்போக பந்த போத் திருத் தத்துவங்கள் பண்ணும்.

மும்மாயை- சுத்த மாயை, அசுத்தமாயை, பிரகிருதிமாயை.

மும்மூர்த்தி உள்ளது - சுத்த வித்தை மற்றும் சுத்த தத்துவம் ஐந்தனுள் இது கீழ்நிற்பது.

மும்முர்த்திகள் மூவர் - சிவன், பரமன், அரி.

220