பக்கம்:சைவ சித்தாந்த அகராதி.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஏழுவகைத் தாளங்கள்

ஐங்கலைகள்



ஏழுவகைத் தாளங்கள் - துருவம், மட்டியம், ரூபகம், சம்பை, திரிபுடை, அடதாளம், ஏகதாளம்.

ஏழுர் விழாத் தலங்கள் - 1. திருவையாறு 2 திருப்பழனம் 3. திருச்சோற்றுத்துறை 4 திருவேதி குடி 5, திருக்கண்டியூர் 6. திருப்பூந்துருத்தி 7. திரு நெய்த்தானம். -

ஏழை - அறிவிலி, எளியவன்.

ஏழையின் ஒன்று சொலி மன்றத்து நின்றவர் - ஏழை இரக்கம் வாய்ந்த பெண். யாழ்ப்பாணத்து மன்னனின் ஊமை மகள். அவன் புத்த குருவுடன் தில்லைக்கு வந்தபோது, தன் மகளையும் அழைத்து வந்தான். புத்தகுரு மாணிக்கவாசகருடன் முறைதவறி உரையாட, அவர் புத்த குருவை ஊமையாக்கினார். இது கண்ட மன்னவன் தன் மகள் ஊமையை நீக்கியருளுமாறு வேண்டினான். ஊமை நீங்கிய பின்,அவள் வாயிலாகவே திருச்சாழல் பாடுவித்தருளினார். திருமயிலாடுதுறை சிவனேசச் செட்டியார் திருமகள் பாம்பு கடித்து மாண்டாள். அவளை உரிய முறையில் நல்லடக்கம் செய்து எலும்பும் சாம்பலும் எடுத்துக் குடத்துள் வைத்துக் கன்னிகா மாடத்திலே வைத்துப் பூசை செய்து வந்தனர். திரு ஞானிசம்பந்தர் "மட்டிட்ட புன்னையம்” என்னும் திருப் பதிகம் பாடி அவளை எழுப்பி அருளினார். (திப 65)

ஏற்புழிக்கோடல் - பல பொருள்களுக்குரிய ஒரு சொல் வரு மிடத்தில், அவ்விடத்திற்கேற் றவாறு,பொருள்கொள்ளுதல். பராசத்தி, கிரியா சத்தி, இச்சா சத்தி, ஞான சத்தி, திரோதன சத்தி என்னும் 5 சத்திகளும் அருட்சத்தி என்றே கொள்ளப்படுதல், சிவஞானபோதம் நூற்பா 5 இல் அருள் என்றது வினைப் பயன்களை அனுபவிக்கச் செய்யும் என்ப்தற்கேற்ப ஏற்புழிக்கோடல் என்னும் உத்தியால் திரோதன சத்தியைக் குறிப்பதாயிற்று.

ஏறு - நந்தி,

ஏனகம் - பாவம். எ-டு ஊன கத்தே உன்னுமது என் என்ற னையேல் ஏனகத்து (திப 49)

ஏனாதிநாதநாயனார்-சான்றார். எயினனுர் சோழநாடு, திருநீற்றுப்பேரன்பர். சங்கமவழிபாடு (63).



- சிவன், அழகு ஆகுபெயர்.

ஐக்கியம் - ஒன்றிப்பு.

ஐக்கிய வாதசைவம் - ஆகந்துக மலம் இருக்க, அறிவை மறைக்க வேறு ஒரு மலம் தேவை இல்லை என்னும் கொள்கை இதில் நம்பிக்கையுள்ளவர் ஐக்கியவாதசைவர். இவருக்கு வேறுபெயர் ஐக்கியவாதி.

ஐங்கரன்-5 கைகளைக் கொண்ட கணபதி.

ஐங்கணை - பஞ்சபாணம். தாமரை, மா, அசோகு,முல்லை, கருங்குவளை ஆகியவற்றின் பூக்கள்

ஐங்கலைகள் - சைவ ஆகமங்களின்படி உலகம் 5 பகுதிகளில் அடங்கியுள்ளது. அவை கலை எனப்படும். அவையாவன: நிவிர்த்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, அநீதை.

74