பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

103


நம்பிக்கைகளையும் அறிந்து கொள்ளுதல் இன்றியமையாத தாகும்.

மக்களது வாழ்க்கையில் அவ்வப்போது ஏற்படும் இயற்கை மாற்றங்கள் காரணமாகவும் உலக நிகழ்ச்சிகளிற் கட்புலனாகாதவண்ணம் செயற்படும் அரிய சில ஆற்றல்கள் காரணமாகவும் பல்வேறு இடையூறுகளும் இன்னல்களும் உளவாதல் இயல்பு. அந்நிலையில் ஏற்படும் பல்வேறு துன்பங்களினின்றும் தப்பியுய்தற்குரிய பாதுகாப்பினைத் தேடிக் கொள்ளுதல் மனவுணர்வு படைத்த மக்களது கடமையாயிற்று. மழை தவழும் மலைப்பக்கங்களிலும் மரங்கள் செறிந்த காடுகளிலும் மக்கள் தனித்தனிக் கூட்டத்தினராகி வாழும் நிலையினராகிய பண்டைக் காலத்தில் தம்முடைய உடைமைகளையும் உயிரையும் பேனிக் கொள்ளும் பொருட்டு ஆற்றல் மிக்க ஊர்க் காவலரும் நாடாளும் தலைவர்களும் மக்கட்குழுவினரால் தேர்ந்துகொள்ளப் பெற்றனர். வெயில், மழை, பனியென்னும் பருவநிலைகளையுணர்ந்து மக்கள் தங்களுக்கு இன்றியமை யாத உணவு, உடை, உறையுள் முதலிய வாழ்க்கை வசதிகளை அமைத்துக்கொள்ளும் அறிவு திரு ஆற்றல்களால் காலந்தோறும் வளர்ச்சிபெற்று வருவாராயினர். எனினும் உலக வாழ்க்கையில் எதிர்பாராத நிலையில் ஏற்படும் புயல், கடல்கோள், பெருவெள்ளம், நில நடுக்கம் முதலிய பேரிடையூறுகளாலும், வெப்பு (சுரம்) குரு (அம்மை) முதலாக அவ்வப்பொழுது தொடரும் நோய்களாலும் பெரிதுந் துன்புறுவாராயினர்.

இவ்வாறு உலக வாழ்க்கையில் நேரும் பலவேறு இடையூறுகளால் நலிவுற்று அஞ்சிய பண்டைக்கால மக்கள், அவ்விடையூறுகளை யெதிர்த்து முன்னேறும் முயற்சியில் தோல்வி கண்டவர்களாய்த் தம்முடைய முயற்சிக்கும் ஆற்றலுக்குந் தடை விளைப்பனவாகத் தம்மை அச்சுறுத்தும் அணங்குபேய் பூதம் முதலாகப் பல்வேறு தெய்வங்கள் இவ்வுலகில் இருக்கின்றன எனவும் அவற்றின் சீற்றத்தினா லேயே உலகில் தமக்குப் பல்வேறு இன்னல்கள் அடிக்கடி ஏற்படுகின்றன எனவும் உறுதியாக நம்பினார்கள். அச்சுறுத்துவனவாகிய அத்தெய்வங்களை எண்ணுந்தோறும் உள்ளந் துணுக்குற்று உடல் நடுக்கமுற்றனர். இவ்விடத்தில்