பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

169


முறை செய்து காப்பாற்றும் மன்னனைக் காத்தற் கடவுளாகிய திருமாலெனக் கொண்டு போற்றும் மரபு தொல்காப்பியனார் காலம் தொட்டுத் தமிழகத்தே நிலை பெற்று வருவதென்பது,

"மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பிற்

றாவா விழுப்புகழ்ப் பூவை நிலையும்”

எனவரும் தொல்காப்பியத் தொடராற் புலனாகும். இம்மரபு

“இருநிலங் கடந்த திருமறு மார்பின்

முந்நீர் வண்ணன் பிறங்கிடை அந்நீர்த் திரைதரு மரபின் உரவோன் உம்பல்”

எனவரும் பெரும்பானாற்றுப்படையில் فاسالي பெற்றுள்ளமை காணலாம். “பெரிய நிலத்தை அளந்த திருவாகிய மறுவை அணிந்த மார்பினை உடைய கடல் போலும் நிறத்தை உடைய திருமாலின் வழியிற்றோன்றிய உரவோன்” என்பது இத்தொடரின் பொருளாகும்.

பெருந்தேவனார் பாடிய கடவுள் வாழ்த்துப் பாடல்களுள் நற்றினைக்குரிய கடவுள் வாழ்த்துப் பாடலாக அமைந்தது

£g.

மாநிலஞ் சேவடி யாகத் தூநீர் வளைநரல் பெளவம் உடுக்கையாக விசும்புமெய் யாகத் திசைகை யாகப் பசுங்கதிர் மதியமொடு சுடர்கண் ணாக இயன்ற வெல்லாம் பயின்றகத்தடக்கிய வேத முதல்வன் என்ப

தீதற விளங்கிய திகிரி யோனே.”

என்பதாகும்.

மிகப் பெரிய நிலப்பரப்பு தன் சிவந்த திருவடி

களாகவும், தூயநீரையுடைய சங்குகள் முரலும் கடல் தான் உடுக்கும் ஆடையாகவும், ஆகாயம் தன் திருமேனியாச