பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


என்பது,

go.

ஆயிரம் விரித்த வணங்குடை யருந்தலை தீயுமிழ் திறனொடு முடிமிசை யனவர மாயுடைய மலர்மார்பின் மையில் வால்வளைமேனிச் சேயுயர் பனைமிசை யெழில்வேழ மேந்திய வாய்வாங்கும் வளை நாஞ்சி லொருகுழை

யொருவனை' (பரி. 1)

எனவரும் பரிபாடற்றொடரால் விரித்துரைக்கப்பெற்றது.

செந்தாமரை மலர்போலும் கண்ணையும் காயாம் பூவினையொத்த திருமேனியினையும், திருமகள் விரும்பி வீற்றிருக்கும் மார்பினையும், அம்மார்பில் விளங்கும் கெளத்துவ மணியினையும் பொன்னாடையாகிய யுடையினையும், கருடச்சேவற் கொடியினையும் உடையவ ராக முதலாம் பரிபாடலில் திருமால் போற்றப்படுகிறார் (பரி. 1).

மண்ணுலகமும், பசும் பொன்னுலகமும் பாழ்பட ஒன்றற்கொன்று மாறிவருதலாகிய பழைய இயல்பினை யுடைய திங்களும், ஞாயிறும் கெடுதலால், அழகிழந்த இயல்பினதாக விசும்பு அழிந்த ஊழிகள் முறை முறையாகக் கழிய, தள் குணமாகிய ஒலியுடனே தோன்றி உருவு காணப்படாத வளி முதலாய பூதங்களின் பரமானுக்கள் வளருதற்கிடமாகிய விசும்பு என்னும் முதற் பூதத்தின் ஊழியும், அவ்வானத்தினின்று எல்லாப் பொருள்களையும் திரட்டுகின்ற காற்றுத் தோன்றிய ஊழியும், அக்காற்றினின்றும் தீத்தோன்றிய ஊழியும், அத்தீயினின்றுந் தோன்றிய பனியும் மழையும் பெய்த ஊழிகளும், அவற்றிற்குப் பின்பு புனலினின்றும் தோன்றுதலால் மீண்டும் வெள்ளத்தினுட் கிடந்து முன் தோன்றிய நான்கு பூதங்கட்கும் உள்ளீடாகிய இருநிலத்தின் ஊழியும் என்று இவ்வூழிகளாலே நெய்தல், குவளை, ஆம்பல், சங்கம், கமலம், வெள்ளம் என எண் குறித்திட்ட பெயர்களது அளவினதாகிய காலத்தின் நீட்சி கழிந்த பிறகு மீண்டும் உயிர்கள் உளவாதற்பொருட்டு அந்நிலத்தினை வெள்ளைப் பன்றியின் உருவு கொண்டு