பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


யொக்கும். நின் திருமேனியினொளி இருண்ட நீலமணியை யொக்கும். நின் கண், தாமரை மலரிரண்டினைப் பிணைத்தாற் போற் றோன்றும். நின் வாய்மை, தட்டாது வருகின்ற நாளை யொக்கும். நினது பொறை, நிலத்தை யொக்கும். நின்னருள், மேகத்தையொக்கும் என அருமறைப் பொருள் நின்னியல்பினையுணர்த்தும். மேற்சொல்லிய பொருட்களையும் பிறவற்றையும் பண்புகளாலும், தொழில் களாலும், ஒத்தும் ஒப்பின்றி எப்பொருளினகத்திலும் நீ எழுந்தருளியுள்ளாய். வேதத்துட் சொல்லப்பட்ட வேள்வி யாசானது உரையும், ஒன்றற் கொன்று உயர்ந்த பலவகை வேள்விகளுள் வேள்வித் துணாய் அமைந்து பசுவைப் பற்றிக் கொள்ளுதலும், மந்திரங்களாலுயர்ந்த தீயினை முறையாற் கடைந்து அத்திகழ் ஒளியையுடைய எரியின் பெருக்கத்தை யுண்டாக்கிக் கொள்ளுதலும் ஆகிய இவை முறையே நின் திருவுருவும், உணவும், நின் வெளிப்பாடும் ஆகும்.

"திருமாலாகிய நீ, அமரர்க்குனவாகிய அமிழ்தத்தைக் கடைந்து கொடுப்பதாக நின்மனத்தின் கண் நினைந்த அளவிலேயே அதன் பயனாகிய மூவாத்தன்மையும் ஒழியா வன்மையும் சாவா மரபும்போல அமரர்க்குரியவாயின. அதனால் நின் பல்புகழ் பரந்தன. அத்தன்மைத்தாகிய இயல்பினையுடையாய் நின் அடியை யாமும் துளக்கமில்லாத நெஞ்சினேமாய்ச் சுற்றத்தோடும் வணங்கிப் பல்காலும் ஏத்தி வாழ்த்தி எம்மறிவு வளைவின்றி மெய்யுணர்வினை உடைய தாகுக என வேண்டிக் கொள்கிறோம்!” எனத் திருமாலைப் போற்றும் நிலையில் கீரந்தையார் பாடிய பாடல் இரண்டாம் பரிபாடலாகும்.

இதன்கண், வ்ேன்வியில் ஆசான் கூறும் மந்திரச் சொல்லே கடவுட்குருவாம் எனவும், வேள்வித்துனாக அமைந்து, அங்குப் பிரிக்கப்பெறும் பசுக்களை ஏற்றலே அவனுக்குரிய உண்டி எனவும், அந்தணர்க்கு வேள்வித் தீயினும், யோகியர்க்கு உள்ளத்திலும், ஞானியர்க்கு எவ்விடத்திலும் இறைவன் வெளிப்படுதலால் வேள்வியில் வளர்க்கப் பெறும் ஒண்சுடர்த்தோற்றமே அந்தணர் கானும் வரவு எனவும் குறிக்கப் பெற்றுள்ளமை நோக்கத்தகுவதாகும்.