பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


எல்லையறியப்படாத வடிவினையுடைய நின்னை உயர்வு கூறக்கருதின் அது நீயே உணரின் அல்லது பிறரால் உணரப்படுவாயல்லை. அநாதியாய் வருகின்ற வேதத்திற்கு முதல்வனே! விரிந்தகன்ற ஆகமங்கள் அனைத்தாலும், அகங்காரத்தாலும், மனத்தாலும், உணர்வினாலும் மற்றும் எல்லாவற்றாலும் நினக்கு வனப்பும் எல்லையும் அறியப்படாத மரபினையுடையவன் நீ, மதியின் கலைக்கதிர்களை உணவாக உடைய அமரர்க்குத் தலைவனாகிய நீ மயங்கி நினக்குப் பிழை செய்து நீ நிலவுலகினையளக்க நின் பெருமைகண்டு அஞ்சிப் போய்க் கடலிற் பாய்ந்த அவுணர்க்கும் பிழை செய்யாது நின்ற ஏனை அவுனர்க்கும் முதல்வனாக வுள்ளாய். இவ்வாறு இருதிறத்தார்க்கும் ஒத்திருத்தலால் நின் இயல்பினை யறிவார்க்கு இவர்பகைவர், இவர் நட்டோர் என்ற வேற்றுமை நின்கண் இல்லை என்பது புலனாம். ஆயிரமாகிய கிளர்ந்த தலையினை உடைய பாம்பினை வாயிற் கெளவிய நின் ஊர்தியாகிய கருடச் சேவலும் நின்னைத் தாங்கலாற்றாது வருந்தி, செங்கண் மாலே ஓ என அலறும் கால முதல்வன் நீ தியினுள் வெம்மையும், பூவினுள் மணமும், கல்லினுள் மணியும், சொல்லினுள் வாய்மையும் அறத்தினுள் அன்பும் (மென்மை) மறத்தினுள் மைந்தும் (வன்மை) வேதத்துள் மறையும் (உபநிடதங்களும் ஐம்பெரும் பூதத்துள் ஆகாயமும், ஞாயிற்றுள் ஒளியும், திங்களுள் தண்மையும் ஆகத் திகழ்கின்றாய். இங்குச் சொல்லப்படாத எல்லாப் பொருளும் நீ, அவற்றிள் உட்பொருளும் நீ. ஆதலால் நீ ஓரிடத்து உறைதலுமில்லை. நினக்கு ஆதாரமாகக் கொண்டு நின்னைத் தாங்கும் இடத்தினையுடையையல்லை. மேற் சொல்லிய இறைமையுடையையாதலின் மறதியுடையார் மறதியில் சிறப்புப் பெறுதல் காரணமாக அவை நினக்கு உளவாம் தன்மையும் பொய். உலகில் முதலினும் இடையினும், இறுதியினும் படைத்தல், காத்தல், அழித்தல் எனும் தொழில் வேற்றுமை பற்றி நீ பிறவாத பிறப்பு எதுவுமில்லை. அவ்வாறு பிறந்து வைத்தும் நின்னைப் பிறப்பித்தோரையுடையையில்லை, காயாம்பூவின் நிறமுடையோய் அருளே குடையாக, அறமே கோலாக மூவேழுலகங்களையும் இருநிழல்படாது நின் அருள் நிழலாகிய முழுநிழற்கண்ணதாகப் பொ துக் கடிந்து தனியே