பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

223


“மீனேற்றுக் கொடியோன்”

எனவும்,

"சுறாக் கொடியோன்” (கலி. 144)

எனவும் வரும் தொடர்சளால் குறிக்கப்பெற்றது. பிரிந்த காதலர் உள்ளத்தே காம உணர்வினைத் தோற்றுவித்து அவர்களை ஒருங்கு கூட்டுதல் காமனது தொழில். ஆதலின் காமன் கரும்பு வில்லிற் றொடுத்து எய்யும் மலரம்பு பிரிந்தாரை வருத்தும் தன்மையதாகும். இந்நுட்பம்,

"தன்னெஞ்சொருவற் கினைவித்தல் யாவர்க்கும்

அன்னவோ காம நின் அம்பு” (கலி. 147)

எனவரும் தொடராலும் “காமா! நின்னுடைய அம்புகள் தனக்கு உரியதாகிய நெஞ்சினைத் தன்மேல் அன்பிலாதான் ஒருவன் பொருட்டு வருந்துவித்தல் சிலர்க்கேயன்றி எல்லார்க்கும் ஆம் தன்மையை உடையவோ? அல்லவோ?” எனவரும் நச்சினார்க்கினியர் உரையாலும் புலப்படுத்தப் பெற்றது. காமனுக்கு வில் கரும்பாகும். இச்செய்தி,

"நெடுமென்றோள்

பெய் கரும்பு ஈர்க்கவும் வல்லன்” (கலி. 142-143)

என வரும் தொடராலும் "நெடிதாகிய மென்தோளிலே காமன் சிலையாகிய எழுதுகரும்பை எழுதவும் வல்லன்” எனவரும் உரையாலும் உய்த்துணரப்படும்.

இரதி

காமவேளின் மனைவியின் பெயர் இரதி என்பதாகும்.

"இரதி காமன் இவள் இவன் எனா” (uf. 19:48)

எனவரும் பரிபாடலடிகளில் காமனும், அவன் தேவியாகிய இரதியும் குறிக்கப் பெற்றுள்ளமை காணலாம். குறிஞ்சிக் கடவுளாகிய முருகப் பெருமான் மாலின் தங்கையாகிய கொற்றவைக்கு மகனாதலின் திருமாலுக்கு மருகன் என்றும்