பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவ வழிபாட்டின் தொன்மையும் உலகளாவிய விரிவும்

15


வழிபாடாக வளர்ச்சி பெற்றதெனத் தெரிகிறது. சிவபெருமானுக்குரியனவாக வழங்கும் சிறப்புப் பெயர்களுள் தானு (தூண்), கம்பன் என்பன. இறைவனைத் தூண்வடிவில் நடுதறியாக நாட்டி வழிபடும் வழிபாட்டு முறையில் அமைந்த சிவலிங்க வழிபாட்டினை அடியொற்றிய காரணப்பெயர்களாகும்.

'நானமுடைவேதியனும் நாரணனும் காண்பரிய தாணு'

“கன்றாப்பூர் நடுதறி"

“பொழிலேழுந்தாங்கி நின்ற கற்றுண்காண்'

“மனந்திருத்தும் மழபாடி வயிரத்துணே”

'காலகாலனைக் கம்பன் எம்மானை'

“தனதன்நற்றேழா சங்கரா குலபாணியே

தானுவே.சிவனே"

என வரும் திருமுறைத்தொடர்கள் இக்கருத்தினை வலியுறுத்தும் சான்றாக அமைந்துள்ளமை இங்கு ஒப்புநோக்கி யுணர்தற் குரியதாகும்.

நாடு நலம்பெறப் பகைவரொடு பொருதுவென்று தம் இன்னுயிர் துறந்து தெய்வநிலைபெற்ற தறுகண்மறவருடைய பெயரும் பீடும் பொறித்து நடப்பெற்ற கல்லினைத் தெய்வமாக நட்டுப் போற்றி வழிபடும் நடுகல்வழிபாடு, எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளைக் கற்றுானாக (நடுதறியாக) நிறுத்திப் போற்றும் சிவலிங்க வழிபாட்டினை அடியொற்றித் தோன்றியதெனக் கருத இடமுண்டு. வீரர்களை நினைவு கூரும் நடுகல் வழிபாட்டில் அவ்வீரர்களுக்கு விருப்பமான தோப்பிக்கள்ளொடு ஆட்டினைப் பலியாகக் கொடுத்து வழிபடுதல் மரபு. கந்துடை நிலையாகிய

14. திருஞானசம்பந்தர், தேவாரம், 1. 52.9.

15. திருநாவுக்கரசர், தேவாரம், 6. 6. 1.

16. மேலது. 6. 8. 1.

17. திருநாவுக்கரசர், தேவாரம், 6. 40, 6.

18. சுந்தரர், தேவாரம், 7. 61.1.

19. திருவிசைப்பா . 7.