பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


என்னும் அடிகளில் நக்கீரர் தொகுத்துக் கூறியுள்ளார்.

'வாகைதானே..................

தாவில் கொள்கைத் தத்தம் கூற்றை பாகுபட மிகுதிப்படுத்தல் என்ப"

எனவரும் தொல்காப்பிய நூற்பாவை அடியொற்றியது மேற்காட்டிய திருமுருகாற்றுப்படைத் தொடராகும். வாகைத்தினையாவது மக்கள் குற்றமற்ற கொள்கையினால் தத்தமக்குரிய அறிவு ஆண்மை பெருமைபற்றிய தொழிற் கூறுபாடுகளை ஏனையோரினும் மிகுத்து மேம்படுதலாகிய வெற்றித் திறமாகும்.

இங்ங்னம் மக்கள் பெறுதற்குரிய வெற்றித்திறங்களுக் கெல்லாம் பற்றுக்கோடாய் உயிர்களின் உள்ளத்தில் அறுமுகச் செவ்வேளாக அமர்ந்தருளி ஊக்குவிப்போன் உயிர்க்குயி ராகிய இறைவனே என்பார், "தாவில் கொள்கைத் தந்தொழில் முடிமார் மனனேர்பெழுதருவானிறமுகனே' என அம் முதல்வனுடைய திருமுகங்கள் எல்லாவற்றுக்கும் உரிய பொதுவியல்பினைப் புலப்படுத்தியருளினார் நக்கீரர்.

“குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின்

மடவரல் வள்ளியொடு நகையமர்ந்தன்று”

என்ற தொடரில் மடவரல் என்பதனை நகைக்கு அடைமொழியாக்கி வள்ளியொடு மடவரல் நகையமர்ந் தன்று எனக் கூட்டி”, “ஒருமுகம் குறவருடைய மடப்பத்தை யுடைய மகளாகிய வல்லிபோலும் இடையினையுடைய வள்ளியுடனே தனக்கு ஓர் அறியாமை தோன்றும் தன்மையுடைத்தாகிய மகிழ்ச்சியைப் பொருந்திற்று என உரை வரைந்து நச்சினார்க்கினியர் அவளொடு நகையமர்தலின் அறியாமை கூறினார் காம நுகர்ச்சி இல்லாத இறைவன் இங்ங்னம் நகையமர்ந்தான், உலகில் இல்வாழ்க்கை நடத்தற்கென்று உணர்க.

‘தென்பாலுகந்தாடும் தில்லைச் சிற்றம்பலவன்’

என்பதனுள்,