பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


ஒவியங்கள் எழுதப் பெற்ற ற அம்பலம் காமவேளது படைக் கொட்டிலை ஒக்கும். சூர்நிறைந்த பக்கமலைகளையுடைய சோலைகளும், மேகத்தால் நீர் நிறைந்து துளும்புவனவாகிய சுனைகளும், மலர்ந்த பூக்களின் செறிவால் அழகு ததும்புபவை காமவேளின் அம்பறாத் துணியை ஒக்கும். கார்காலம் தோற்றுவிக்கும் காந்தட் குலைகள் போரில் தோற்றுக் கட்டுண்டார் கைகளை ஒப்பன. தும்பியால் கட்டவிழ்ப்பனவாகிய அழகிய காந்தள் முகைகள் கட்டுதலையுடைய யாழ் நரம்பினது முருக்கை நெகிழ்ப்பார் கையை ஒத்தன. அழகிய மேகம் முன்பனிக் காலத்தின்கண் ஆரவாரித்து இந்திரனது வானவில்லை வளைத்தது. நினது மலைமேல் உள்ள மரங்கள் அவ்வில் சொரியும் கணைகளைப் போன்று மெல்லிய மலர்களைச் சொரிந்தன. நின் குன்றின் கண் கோட்டத்திலும் அதனைச் சூழ்ந்துள்ள இடத்திலும் மிகும் அரவம்போலத் திரளாகிய தாளம் ஒலிக்கும் ஒலியோடு சிறந்து வாத்தியங்கள் முழங்க மேகத் தொகுதியும் அவ்வாரவாரத்தோ டு ஒத்து நின்றன. மலைக்கண் சிகரங்கள் அருவி ஆரவாரித்துச் சொரிதலால் முத்துக்களை அணிந்தால் ஒத்தன. குருவிகள் ஆரவாரிக்கு மாறு தினைக்கதிர்கள் விளைந்தன. கரையினின்றும் சாய்ந்தாலொத்த கொருக்கச்சியை முட்டுவனவாகிய பலநிற மலர்களால் வளையப்பட்டு அழகு பொருந்திய சுனைகள் இந்திரவில் வளைந்துள்ள வானத்தை ஒப்பனவாகி வண்டுகள் முரலும் வனப்புடைய ஆயின. செருவில் வெல்லும் வேலைத் தாங்கிய சேனையையுடைய செல்வனே! நின் பூசைக்கண் விரிதலுள்ள யாழ் நரம்பினது ஒலியும் புலவர் பாடிய இயற் பாட்டுக்களும் பொருந்தி வேதவொலியும் அருச்சிக்கும் பூவும், தீபமும் கூடி எரியின் கண் உருகும் அகிலும், சந்தனமும் ஆகிய நறும்புகை கமழாநிற்கும் நின் திருவடி யின்கண் தங்குதலை எமக்கு உரித்தாக யாம் உறையும் எம் பதியைச் சேர்ந்தாற்போல எம் சுற்றத்தோடும் கூடி யாம் பிரியாதிருப்பேமாக அருள் செய்க என வாழ்த்தி முடிப்பதாக வமைந்தது குன்றம் பூதனார் பாடிய இப்பரிபாடலாகும். இப்பாடல் திருப்பரங்குன்றத்தின் மலைவளத்தையும், இசை முதலிய கலைவளத்தையும், அம்மலைக்கண் முருகனுக்கு நிகழும் வழிபாட்டுச் சிறப்பினையும், அவ்வழிபாட்டில்