பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


திருக்கோயிலிலே பலவகை வாத்தியங்களும் முழங்கத் தொடங்கப் பெற்ற திருவிழாவிலே மாலைக் காலத்தில் மனைவாழ் மங்கல மகளிர் தாம் பெற்ற மழலைச் செல்வங்களாகிய குழந்தைகளோடும் தம் கணவரையும் உடனழைத்துக் கொண்டு வயதின் முதிர்ந்தோராகிய பேரிளம்பெண்டிர் கடவுட்பூசைக்கு இன்றியமையாத பூவும் நறும்புகையும் ஏந்திக்கொண்டு இறைவனைத் தொழுது போற்றிப் பாதுகாத்து உடன்வரத் திருக்கோயிலில் இறைவனை வழிபடச் சென்ற அன்பின் திறத்தினை விரித்துரைக்கும் முறையில் அமைந்தது,

'திண்கதிர் மதாணி ஒண்குறு மாக்களை

ஒம்பினர்த் தழீஇத் தாம்புணர்ந்து முயங்கித் தாதணி தாமரைப்போது பிடித்தாங்குத் தாமும் அவரும் ஒராங்கு விளங்கக் காமர் கவினிய பேரிளம் பெண்டிர் பூவினர் புகையினர் தொழுவனர் பழிச்சிச் சிறந்து புறங்காக்குங் கடவுட் பள்ளியும்”

(மதுரைக். 461-468)

எனவரும் மதுரைக் காஞ்சித் தொடராகும்.

“மகiன்ற மகளிர் திண்ணிய ஒளியினையுடைய பதக்கம் அணிந்த ஒண்மைவாய்ந்த இளங்குழந்தைகளைத் தாது சேர்ந்த செவ்வித்தாமரைப் பூவைப் பிடித்தாற்போலத் தழுவியெடுத்துக் கொண்டு தாமும் கணவரும் தம்குழந்தை களும் சேரச் சீலமுடையராகச் சிறந்து விளங்கப் பெரு விருப்பமும் அழகுமுடையராய்த் திகழும் செம்முது பெண்டிராகிய பேரிளம் பெண்கள் கடவுட் பூசைக்கு வேண்டும் பூவினையுடையராய் நறும்புகையினையுடையராய் றைவனை மிகுத்துத் துதித்துப் பாதுகாத்து நடத்தும் வத் திருக்கோயில்களும்” என்பது மேற்குறித்த