பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கவிலக்கியத்திற் சிவன் வழிபாடும் சைவசமயத் தத்துவ...

331


பள்ளியென்னும் சொல் புத்தநோன்பியர் தங்கி வழிபடும் பெளத்தப் பள்ளிக்குச் சிறப்பு முறையில் வழங்குவதனையறிந்த நச்சினார்க்கினியர், மதுரைக்காஞ்சியில் சிவன் மாயோன் முதலிய தெய்வங்களுக்கு உரியதாகவமைந்த தொடருடன் இணைந்த கடவுட்பள்ளி என்பதனைத் தனியே பிரித்துப் 'பெளத்தப்பள்ளி’ எனப் பொருள் வரைந்தார் எனக் கருத வேண்டியுளது.

எனினும், பள்ளி’ என்னும் சொல், தமிழ்த் தொன்னூல்களில் இடம் என்ற பொதுப்பொருளிலன்றிப் “புறச்சமயத்தார்க்குரிய இடம் என்ற சிறப்புப் பொருளில் வழங்கப்படாமையானும், பின்னர் இயற்றப்பட்ட சிலப்பதிகாரம், மணிமேகலை என்ற காப்பியங்களிலும் 'அறவோர் வாழும் இடம்’ என்ற பொதுமையின் நீங்காது புத்தர் சமனர் தங்குமிடங்களுக்குச் சிறப்பாக வழங்கப் பெற்றிருத்தலையும் நாயன்மார் ஆழ்வார் காலங்களில் பள்ளி என்னும் இச்சொல் சக்கரப்பள்ளி, மயேந்திரப்பள்ளி, அகத்தியான்பள்ளி எனச் சைவத் திருக்கோயில்களையும், பார்த்தன்பள்ளி என வைணவத் திருக்கோயிலையும் குறித்து வழங்கப்பெற்றிருத்தலையும் கூர்ந்து நோக்குங்கால், மதுரைக்காஞ்சியில் கடவுட்பள்ளி, அந்தனர் பள்ளி எனவரும் தொடர்களிலுள்ள பள்ளி என்னும் சொல் இடம்’ என்ற பொதுப் பொருளிலேயே வழங்கப்பெற்றதென்பதும், எனவே கடவுட்பள்ளி’ என்ற தொடர்க்குத் தெய்வம் உறையும் கோயில்’ எனப் பொருள் கொள்வதன்றிப் ‘பெளத்தப்பள்ளி’ எனப் பொருளுரைத்தல் சிறிதும் பொருந்தாதென்பதும் நன்கு புலனாகும்.

மதுரைக் காஞ்சியிற் கடவுள்பள்ளியையொட்டி அந்தனர் பள்ளி குறிக்கப்பெற்றுளது. சங்ககாலத்தில் தெய்வங்கொள்கையாகிய சிவவழிபாட்டு நெறியினைச் சார்பாகக்கொண்டு வேதநெறியாகிய வைதிகம் தமிழகத்தில் வேரூன்றி நிலைபெற்ற திறத்தினைப் புலப்படுத்தும் முறையிற் கடவுட்பள்ளியையடுத்து அந்தனர் பள்ளியமைந்துள்ள இடத்தொடர்பு குறிப்பிற் புலப்படுத்தல் காணலாம். வேதம் என்பது தோற்றமில் காலமாக நிலைபெற்றுள்ள தொன்மை