பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கவிலக்கியத்திற் சிவன் வழிபாடும் சைவசமயத் தத்துவ...

333


‘நன்றாய்ந்த நீணிமிர்சடை

முதுமுதல்வன் வாய்போகாது ஒன்றுபுரிந்த ஈரிரண்டின் ஆறுணர்ந்த ஒரு முதுநூல் இகல்கண்டோர் மிகல்சாய்மார் மெய்யன்ன பொய்யுணர்ந்து பொய்யோராது மெய்கொளீஇ மூவேழ்துறையும் முட்டின்றுபோகிய உரைசால் சிறப்பின் உரவோர்மருக” (புறம். 156)

எனச் சோனாட்டுப் பூஞ்சாற்றுப் பார்ப்பான் கெளனியன் விண்னந்தாயனை ஆவூர் மூலங்கிழார் பாடிய புறப்பாடற் பகுதியால் இனிது விளங்கும்.

பெரிதும் ஆராயப்பட்ட மிக்க நீண்ட சடையினை யுடைய பழையோனாகிய இறைவனது (சிவபெருமானது) வாக்கை விட்டு நீங்காது அறம் ஒன்றையே மேவிய நான்கு பகுதிகளையுடையதாய் ஆறு அங்கங்களாலும் உணர்தற்குரிய ஒரு பழைய நூலாகிய வேதத்திற்கு மாறுபட்ட நூல்களைச் செய்தாராகிய புத்தர் முதலிய புறச் சமயத்தோரது மிகுதி யாகிய செருக்கினை அடக்குதல் வேண்டி அவரது மெய் போன்ற பொய்யினை உளப்பட்டுனர்ந்து அப்பொய்யை மெய்யென்று எண்ணாது உண்மைப்பொருளை அவர்கள் ஏற்றுக்கொள்ளும்படி செய்து, இருபத்தொரு வேள்வி களையும் குறைவின்றிச் செய்து முடித்த புகழமைந்த தலைமையையுடைய அறிவுடையோர் மரபில் உள்ளோனே.” எனக் கெளனியன் விண்ணந்தாயனையும் அம்மறையோன் புத்தன் முதலிய புறச்சமயத்தாரை வாதில் வென்று அவர்களைத் தன்வழிப்படுத்தி வேதவேள்விகளைத் திறம்பெற நிகழ்த்திய அவனது சீர்த்தியையும் சிறப்பித்துப் பாராட்டும் முறையிற் பார்ப்பனவாகை என்னுந்துறையிற் பாடற்பெற்றது மேற்குறித்த புறநானூற்றுப் பாடலாகும்.

சங்க காலத்தில் வாழ்ந்த தமிழக அந்தணர்கள் சிவநெறியுடன் தொடர்புடைய வைதிக நெறியினராய் ஒழுகினர் என்பது இப்புறப்பாடலால் இனிது விளங்கும்.