பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


இங்ங்னம் சிவநெறியும் வேதநெறியும் தம்முட் பிரிவின்றி ஒருநெறியாய் விரவி வளரும் நிலையிற் சங்க காலத்தில் வாழ்ந்த பூஞ்சாற்றுார்ப் பார்ப்பான் விண்ணந்தாயன் தோன்றிய மரபாகிய கெளனிய கோத்திரத்தில் இற்றைக்கு ஆயிரத்து முந்நூறாண்டுகட்குமுன் காழிப்பதியில் சிவபாத விருதயர்க்கும் பகவதியார்க்கும் மகவாகத் தோன்றியவரே சைவ சமய குரவர் நால்வருள் முதலாமவராகப் போற்றப்பெறும் தமிழ் ஞான சம்பந்தர் என்பது இங்கு நினைவுகூரத் தகுவதாகும்.

முற்காலத்தில் பேரூர்கள் தோறும் இறைவனை வழிபடுதற்கும் மக்கள் பலரும் கூட்டமாகத் தங்கியிருத்தற்கும் ஏற்றவண்ணம் பொதியில் எனப்படும் அம்பலங்கள் ஊரின் நடுவே அமைக்கப் பெற்றிருந்தன. அவ்வம்பலத்தின் கண்னே மக்கள் பலரும் அன்பினால் ஒருங்குகூடி இன்னவுரு இன்னநிறம் என்று அறியவொண்ணாத இறைவனை மலர்தூவி வழிபடுதற்குரிய முறையில் ‘கந்து’ எனப் பெயரிய தெய்வம் உறையும் துனொன்று நடுவே நாட்டப்பட்டிருந்தது. அவ்வம்பலத்தின் அருகே தெய்வத்தை வழிபடுதற்கு வருவோர் நீராடித் தூய்மையுடையராகச் செல்லுதற்கு ஏற்றவாறு தீர்த்தக்குளம் அமைக்கப்பெற்றிருந்தது. போர்க்காலத்திற் பகைவரது நாட்டினின்றும் சிறைபிடித்துக் கொணரப்பட்ட மகளிர் பலரும் அங்குள்ள திருக்குளத்தில் நீராடிப் பொதியிலாகிய அம்பலத்தில் திருவலகிடுதல் மெழுகுதல் முதலிய திருப்பணிகளைச் செய்து மாலைக் காலத்திலே திருவிளக்கு ஏற்றி வழிபட்டனர். ஊர்மக்கள் அங்குக்கூடித் தெய்வம் உறையும் தூணாகிய கந்தினை மலர்தூவி வழிபாடு செய்தனர். ஊர்க்குப் புதியராய் வந்தோர் பலரும் அங்குத் தங்கியிருந்தனர். இச்செய்தி,

“கொண்டி மகளிர் உண்துறை மூழ்கி

அந்தி மாட்டிய நந்தா விளக்கின் மலரணி மெழுக்கம் ஏறிப் பலர்தொழ வம்பலர் சேக்கும் கந்துடைப் பொதியில்’

(பட்டினப். 246-249)