பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


விருந்திற் பாணி கழிப்பி”

(மலைபடு. 538-538)

என மலைபடுகடாத்தில் விரித்துரைக்கப்பெற்றது.

எட்டுத் தொகை நூல்களுள் ஐங்குறுநூறு, கலித் தொகை, அகநானூறு, புறநானூறு என்னும் தொகை நூல்கள் நான்கினுக்கும் அமைந்த கடவுள் வாழ்த்துப் பாடல் சிவபெருமானைப் போற்றுவனவே. இவற்றுள் கலித் தொகைக்கு அமைந்த கடவுள் வாழ்த்து நெய்தற்கலி பாடிய ஆசிரியர் நல்லந்துவனாராற் பாடப்பெற்றதாகும். ஏனைய மூன்றும் பாரதம் பாடிய பெருந்தேவனாராற் பாடப் பெற்றனவாகும். பதிற்றுப்பத்து என்னும் தொகை நூல் முன்னுள்ள முதலாம் பத்தும் இறுதியிலுள்ள பத்தாம் பத்தும் கிடைக்காமையால் அதன் முன்னுள்ள கடவுள் வாழ்த்தும் கிடைத்திலது. தொல்காப்பியம் புறத்திணையியல் 26ஆம் சூத்திரவுரையில் கடவுள் வாழ்த்துக்கு உதாரணமாக நச்சினார்க்கினியர் காட்டிய பாடல்,

“எரியெள்ளுவன்ன நிறத்தன் விரியினர்க்

கொன்றையம் பைந்தார் அகலத்தன் பொன்றார் எயில் எரியூட்டிய வில்லன் பயிலிருட் காடமர்ந்தாடிய ஆடலன் நீடிப் புறம்புதை தாழ்ந்த சடையன் குறங்கறைந்து வெண்மணியார்க்கும் விழவினன் நுண்ணுற் சிரந்தை யிரட்டும் விரலன் இரண்டுருவாய் ஈரணிபெற்ற எழிற்றகையனேரும் இளம்பிறை சேர்ந்த நுதலன் களங்கனி மாறேற்கும் பண்பின் மணிமிடற்றன் தேறிய சூலம் பிடித்த சுடர்ப்படைக் காலக்கடவுட் குயர்கமா வலனே'

என்பதாகும். இது பதிற்றுப்பத்து என்னும் தொகை நூலுக்குரிய கடவுள்வாழ்த்துப் பாடலாக இருத்தல் வேண்டும் என்பது அறிஞர் சிலரது கருத்தாகும். இப் பாடலைப் பாடியவர் சங்கத்தொகை நூல்கள் பலவற்றுக்குக்