பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கவிலக்கியத்திற் சிவன் வழிபாடும் சைவசமயத் தத்துவ...

359


“爵 நாளும் ஒவ்வொரு - கலையினையிழந்து தேய்ந் தொழிவாயாக’ எனச் சந்திரனைச் சபித்துரைத்தான். அச்சாபததால் கலைகளையிழந்து தேய்ந்து நலிவுற்ற சந்திரன் சிவபெருமானைச் சரணடைந்தான். அவனது இடரைப் போக்கத் திருவுளங்கொண்ட சிவபெருமான் பிறையாகிய அவன் தோயாதவாறு தனது சடையில் தரித்தருளினார் எனப் புராணம் கூறும்.

'முதிராத் திங்களொடு சுடருஞ்சென்னி (அகம். கட, வா.) ‘புதுத்திங்கட் கண்ணியான் (கலித்.) 'பிறைநுதல் வண்ணமாகின்று, அப்பிறை

பதினெண்கணனும் ஏத்தவும்படுமே (புறம் கட. வா.) 'கொலைவன் சூடிய குழவித்திங்கள்போல் (கலி. 103) ‘எரிகதிர்க் கணிச்சியோன் சூடிய பிறை (கலி.)

எனவரும் தொடர்கள் இறைவன் பிறையினைச் சடைக் கனிந்த தோற்றத்தைப் புலப்படுத்துவன.

ஆலின் கீழமர்ந்து அறமுரைத்தது

சிவபெருமான், தாழ்சடைப்பொலிந்த அருந்தவக் கோலமுடையனாய் நீர்மலி கரகம் கொண்டு மோன முத்திரைக்கையினனாய் ஆலின் கீழமர்ந்து சனகர் முதலிய முனிவர் நால்வர்க்கு அறம் முதலிய நாற்பொருள்களை அறிவுறுத்தியருளினான் எனப் புராணம் கூறும். ஆலின் கீழமர்ந்து தென்திசை நோக்கி முனிவர்க்கு அறமுறைத் தருளிய திருக்கோலம் சங்கநூல்களில் 'ஆலமர்செல்வன் என்ற திருப்பெயராற் போற்றப்பெறுகின்றது.

'ஆல்கெழு கடவுட் புதல்வ (திருமுருகு.) 'நீலநாகம் நல்கிய கலிங்கம்

ஆலமர் செல்வற் கமர்ந்தனன் கொடுத்த ஆர்வநன்மொழி ஆயும் (சிறுபாண்.) 'ஆலமர் செல்வன் அனிசால் பெருவிறல்’ (கலி. 81)

'ஆலமர் செல்வன் அணிசால் மகன் (கலி. 83)